இலங்கை Reecha பண்ணையில் துபாய் பூசணி அறுவடை... நீங்களும் ஈஸியாக சம்பாதிக்கலாம்
இலங்கை நாட்டில் மற்றொரு குட்டி இலங்கையாக மாறிவரும் றீ(ச்)ஷா பண்ணையில் தற்போது பூசணி அறுவடை செய்யப்பட்டுள்ள காட்சியினை காணலாம்.
றீ(ச்)ஷா பண்ணை
இயற்கை எழில் கொஞ்சும் அழகில் இலங்கை கிளிநொச்சி பகுதியில் யாழ் இயக்கச்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள 'றீ(ச்)ஷா' ஒருங்கிணைந்த பண்ணையில் காண்கறி மற்றும் பழங்களின் விளைச்சல் அமோகமாக இருக்கின்றது.
யாழ் இயக்கச்சிப் பிரதேசத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படும் இந்த பண்ணை தற்போது குட்டி இலங்கையாகவே மாறி வருகின்றது.
இந்த பண்ணையில் பயிர் விளைச்சல்கள் மக்களை வியக்க வைத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள காணொளியில் துபாய் பூசணியை அறுவடை செய்துள்ளனர்.
வெறும் ஒரு ஏக்கரில் மாமரங்களில் இடையே விதை விதைக்கப்பட்டு வெறும் 2 மாதங்களில் அறுவடைக்கு தயாராகியுள்ளது. அவ்வாறு அறுவடையில் கிடைத்த காய்களையும், நீங்களும் சுய தொழிலாளியாக மாறுவதற்கான யோசனைகளையும் காணொளியில் அவதானிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |