வீட்டில் வெண்டக்காய் இருக்கா? பத்தே நிமிடத்தில் ஐயர் வீட்டு மோர் குழம்பு இப்படி செய்ங்க
நாம் எல்லோரும் பொதுவாக சாதத்திற்கு பல வகையான கறிவகைகளை செய்து சாப்பிட்டிருப்போம். அந்த வகையில் மோர் குழம்பு தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்று.
இதை தயிரில் இருந்து செய்வார்கள். இதை பலரும் அவர்களுக்கு பிடித்த வகையில் செய்வார்கள். பொதுவாக இது வெண்டக்காயை வைத்து செய்வார்கள். இந்த ரெசிபியில் வெண்டக்காய் வைத்து குழம்பு செய்தாலும் வித்தியாசமாக செய்யப்போகிறோம்.
இந்த நிலையில் வெண்டிக்காயை வைத்து மோர் குழம்பு செய்யலாம். நாம் பல வகையான குழம்பு வகைகளை செய்திருப்போம். ஆனால் மோர் குழம்பிற்கு அடிமையாகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த ஐயர் வீட்டு மோர் குழம்பை எப்படிசய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் - 1/2 கப் (துருவியது)
- பச்சை மிளகாய் - 3
- வெண்டக்காய் - (நறுக்கியது)
- இஞ்சி - சிறிதளவு
- சின்ன வெங்காயம் - 3
- காய்ந்த மிளகாய் - 3
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன் (ஊறவைத்தது)
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
- உப்பு - சுவைக்கு ஏற்ப
- எண்ணெய் - தேவையான அளவு
செய்யும் முறை
மோர் குழம்பு செய்ய முதலில் கடலை பருப்பை 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெண்டக்காயை சேர்த்து வதக்கவும்.
பின்னர் ஒரு மிக்ஸியில் துருவி வைத்து தேங்காயம், சீரகம், சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், ஊற வைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு மையாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது இதனை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் வெண்டக்காயுடன் சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது எடுத்து வைத்துள்ள தயிருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து அதில் ஊற்றவும்.
இப்போது மீண்டும் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
தாளித்த இந்த கலவையை அடுப்பில் கொதித்துக்கொண்டிருக்கும் குழம்பில் உற்றவும் சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும். இப்படி செய்து எடுத்தால் அட்டகாசமான சுவையில் ஐயர் வீட்டு மோர் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
