அட ச்சீ... மில்க் ஷேக் மேகியை அடுத்து பட்டர் சிக்கன் பானிபூரி- கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
இன்றைய உணவு வகைகளில் உணவுகளில் கிரியேட்டிவிட்டியை புகுத்துவது இன்று வாடிக்கையாகிவிட்டது. கிரியேட்டிவிட்டு என்ற பெயரில் சில வித்தியாசமான உணவுகளை செய்து வருகின்றனர்.
சிலர் தயாரித்த உணவு காம்பினேஷன்கள் நன்றாக இருக்கிறது. பலரது காம்பினேஷன்கள் சகிக்க முடியவில்லை. அந்த வகையில், தற்போது சமூகவலைத்தளங்களில் பட்டர் சிக்கன் பானி பூரி என்பது வைரலாக பரவி வருகிறது.
பானி பூரி என்பது, இனிப்பு, காரம், புளிப்பு ஆகிய சுவைகள் கலந்து செய்யப்படும் வட இந்திய உணவு இன்று இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளது. பலர் தற்போது பானி பூரியை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
தற்போது, பட்டர் சிக்கன் பிளேவர் பானிபூரி என்ற விஷயம் டிரெண்டாகியுள்ளது. இதன் பெயரை கேள்விபட்டதுமே நெட்டிசன்கள் கிண்டல் பதிவுகளை போட துவங்கிவிட்டனர். ட்விட்டரில் இது குறித்த பல மீம்கள் வெளியாகி வருகிறது.
