நடிகை வீட்டில் தொழிலதிபர் சடலமாக மீட்பு... அதிர்ச்சியில் திரையுலகம்!
பிரபல கன்னட திரைப்பட நடிகை கிரிஷி தபண்டா வீட்டில் தொழிலதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கிரிஷி தபண்டா
கன்னட சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கிரிஷி தபண்டா, பெங்களூருவின் ராஜேஸ்வரி நகரில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் தொழிலதிபரான வைசாக் என்பவர் கடந்த ஒரு வாரமாக தங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தன்று நடிகை கிரிஷி தபண்டா வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீடு திரும்பியபோது, வைசாக் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், வைசாக் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், சம்பவ இடத்தில் விரிவான ஆய்வையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில், உயிரிழந்த இடத்தில் எந்தவித தற்கொலைக் கடிதமும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வைசாக் கடந்த சில நாட்களாக தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகளால் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக அவர் தனியாக வசித்து வந்ததாகவும், அதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கிரிஷி தபண்டா, வீட்டில் தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் கன்னட திரைப்பட வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அதன் பின்னணி குறித்து பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |