கொத்து கொத்தா முடி கொட்டுதா? விலையுயர்ந்த பொருட்களை தூக்கி வீசிட்டு... இந்த 3 இயற்கை பொருளை பயன்படுத்துங்க!
நாம் தலைமுடியை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள கடைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவோம். ஆனால் அந்த கெமிக்கல் கலந்த பொருட்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, மோசமாக்கவே செய்யும். இதற்கு ஒரு சிறந்த வழி என்றால், இயற்கை பொருட்களால் தலைமுடியைப் பராமரிப்பது தான். கீழே குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதைப் படித்து பின்பற்றி கொத்துகொத்தாக தலைமுடி உதிர்வதைத் தடுத்திடுங்கள். கடுகு எண்ணெய் பலவீனமான மற்றும் வறண்ட தலைமுடிக்கு கடுகு எண்ணெய் மிகவும் நல்லது. அதற்கு சிறிது கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை தலைமுடியின் வேர்ப்பகுதியில் படும்படி தடவி மசாஜ் செய்து, ஒரு ஈரத்துணியால் தலையைச் சுற்றி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.
இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும் வெந்தயம் வெந்தய விதைகளை தலைமுடிக்கு வலிமையாக்குவதோடு மட்டுமின்றி, மென்மையாகவும், பட்டுப்போன்றும் மாற்றும். அதற்கு சிறிது வெந்தயத்தை நுரில் ஊற வைத்து அரைத்து, அதில் சிறிது கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலைமுடியின் தடலி ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
முட்டை
முட்டை தலைமுடிக்கு ஊட்டத்தை அளித்து, மயிர்கால்களை வலுவாக்கும். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை பிரித்தெடுத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து நன்கு கலந்து, பின் அதை தலைமுடியில் தடவ வேண்டும். பின் ஒரு மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்புவால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், தலைமுடி உதிர்வது நின்று, நன்கு வலுவாகும்.