கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கும் தமிழ்பெண் சஞ்சனாவுக்கும் இப்படி தான் காதல் மலர்ந்ததா? வெளியே கசிந்த டாட்டூ ரகசியம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனுக்கும் கடந்த நாட்களுக்கு முன்பு திருமணம் கோவாவில் நடைப்பெற்றது. இதையடுத்து, பும்ரா ட்விட்டர் பக்கத்திலும். நீங்கள் தகுதியானவர் என உங்களைக் காதல் கண்டறிந்தால் அது உங்களை இயக்கும்.
காதலால் இயங்குகிறோம். இருவரும் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்க இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சியான நாள். எங்களின் திருமண தகவலையையும், மகிழ்ச்சியையும் உங்களிடம் பகிர்வதால் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம் என பதிவிட்டார். இந்நிலையில், சஞ்சனா கணேசன் கையில் வரையப்பட்டுள்ள டாட்டூ வைரலாக பரவி வருகிறது.
அதில், திருமணத்தின்போது மெஹந்தியில், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை லோகோ இடம்பெற்றுள்ளது. அதனால், இருவரும் உலகக்கோப்பையின் போதுதான் காதலை வெளிப்படுத்தி இருப்பார்கள், அதற்கு அடையாளமாகதான் உலகக்கோப்பை லோகோவை சஞ்சனா கணேசன் தனது கையில் மெஹந்தியால் வரைந்துள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.
The WC motif cause they met during the WC? pic.twitter.com/WcuH9vuvxn
— Bubble (@duvidhaa) March 16, 2021