புகாட்டி கார் என்ஜினை போன்று தயாரிக்கப்பட்ட வாட்ச்.. விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?
மனிதனாய் பிறந்த ஒவ்வொருத்தருக்கும், காலம் நேரம் முக்கியமானது. அதனை தெரிந்துகொள்ள கைகளில் கடிகாரமாகவும், பல வகையான கடிகாரத்தையும் பயன்படுத்துவோம்.
கையில் அணியும் கடிகாரத்தில் பல தொழில் நுட்பங்கள் வந்துவிட்டது. கிட்டத்தட்ட ஒரு ஸ்மார்ட்போனை கையில் கட்டியிருப்பது போன்றுதான் என சொல்ல வேண்டும்.
அந்த வகையில், செம்ம ஸ்டைலிஷாக, கார் என்ஜின் அமைப்பைப்போல், புகாட்டி டபிள்யூ 16 (bugatti w16 watch) கைகடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது. புகாட்டி கடிகாரத்தை ஜேக்கப் அன் கோ மற்றும் புகாட்டி நிறுவனம் இணைந்து வடிவமைத்துள்ளது.
இதன் சிறப்பே புகாட்டி டபிள்யூ 16 காரின் மோட்டார் செயல்பாட்டைக் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருப்பதுதான் இதன் விலை மட்டுமே 11.25 கோடி. 57.8 மிமீ × 44 மிமீ அளவும், 21.5 மிமீ உயரமும் கொண்டது.
புகாட்டி டபிள்யூ 16-ல் மேல்புறம் கிரிஸ்டல் நீல நிறத்துடன் கண்ணாடி திரையாக உள்ளது. அதன் பக்கங்களில் ஒரு சிறிய பட்டன் போன்ற அமைப்பு உள்ளது. பட்டனை அழுத்திபின் கைகடிகாரம் செயல்படுகிறது.
விலையுர்ந்த இந்த கைகடிகாரத்தில் 190 வெள்ளை வைரங்கள், 18 காரட் வெள்ளை நிறத்தாலான தங்கப் பட்டையில் பொருத்தியுள்ளனர். நேரத்தை துல்லியமாக காட்ட 30 டிகிரி கோணத்தில் டூர்பில்லன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கடிகாரம், புகாட்டி காரின் இன்ஜீனை அப்படியே சித்தரித்து உள்ளது. இதைப்பற்றி அந்நிறுவனம் தெரிவிக்கையில், எப்பொழுதும் நாங்கள் ஆடம்பர கடிகாரங்களையே உருவாக்குகிறோம்.
இதை யாரும் கற்பனை கூட செய்து பார்க்கமுடியாதவை. இது உலகின் உண்மையான மோட்டார் கைக்கடிகாரமாக அமையும் என தெரிவித்து இருக்கிறார்.