சூரியன் புதன் உருவாக்கும் புதாத்திய ராஜயோகம்: ராஜ வாழ்க்கை வாழப்போகும் டாப் 3 ராசிகள்!
பொதுவாகவே நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில், மார்ச் 14 ஆம் திகதி கிரகங்களின் அரசனாக திகழும் சூரியன் மற்றும் கிரகங்களின் இளவரசனாக அறியப்படும் புதன் இணைவதால் புதாத்திய யோகம் உருவாகின்றது.

குறித்த ராஜயோகமானது அனைத்து ராசிகளின் வாழ்வியலிலும் குறிப்பிட்ட சில சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தினாலும் தொழில், பொருளாதாரம் மற்றும் குடும்ப வாழ்வில் பேரதிஷ்டத்தை அனுபவிக்கப்போகும் முக்கிய 3 ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

சூரியன் மற்றும் புதன் உருவாக்கும் புதாத்திய ராஜயோகமானது மேஷ ராசியினருக்கு தொழில் ரீதியில் பல்வேறு வகையிலும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது.
புதனின் ஆசியால் இந்த காலகட்டத்தில் அறிவாற்றல் அதிகரிக்கும் மனநிலையில் தெளிவு பிறக்கும். சூரிய பகவானின் ஆசியால் உயர் பதிவி தேடி வரும். பணவரவு எதிர்ப்பார்த்ததை விடவும் அதிகமாக இருக்கும்.
குறிப்பாக எதிர்காலம் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர் குடும்பத்தவர்களுடன் ஆலோசனை செய்து பின்னர் முடிவெடுப்பது நல்லது.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு குறித்த புதாத்திய ராஜயோகத்தால் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமாக மாற்றங்கள் ஏற்படப்போகின்றது.
திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு நீங்கி கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும். கருத்து வேறுப்பாடுகளால் சந்தித்த முக்கிய பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
சூரிய பகவானின் ஆசியால் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் நிலை உண்டாகும்.
மிதுனம்

இந்த ராஜ யோகமானது மிதுன ராசியினரின் வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக மாற்றங்களையும், அமோகமான அதிர்ஷ்ட பலக்களையும் கொடுக்கப்போகின்றது.
தொழில் ரீதியில் இதுவரையில் இல்லாத அளவுக்கு முன்னேற்ற பலன்களை அனுபவிக்கும் நிலை தானாகவே உருவாகும்.
பொருளாதார ரீதியில் மகிழ்ச்சிகரமான சூழலை அனுபவிக்கும் நிலை உண்டாகும். எதிர்பாரத பணவரவு மற்றும் பதவி உயர்வால் மகிழ்ச்சியடைவீர்கள். செலவு விடயத்தில் கூடுதல் கவனம் தேவை.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |