சனி ஜெயந்தியான இன்று உருவாகியுள்ள புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ட கதவு திறந்தாச்சி!
நவகிரகங்களில் நீதிமானாக அறியப்படுபவர் சனி பகவான். இவர் ஒருவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார். இவர் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் பிறந்ததாக கூறப்படுகிறது.
சனி பகவான் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு மே 16ஆம் திகதியான இன்று சனி ஜெயந்தி அனுஷ்டிக்கப்படுகின்றது.

சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமையிலேயே இந்த நாள் வருவது மிகவும் சிறப்பானதாக அமைகிறது. மேலும் ரிஷப ராசியில் கிரகங்களின் ராஜாவான சூரியன் மற்றும் புத்திகாரகனான புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகமும் உருவாகியுள்ளது.
சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சனி ஜெயந்தி சனிக்கிழமை தினத்தில் வருவதால் மூன்று ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி நிலையில் உச்சகட்ட பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள். அவை எந்தெந்த ராசிகள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

சனி ஜெயந்தி நாளில் ரிஷப ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகியிருப்பதால், இந்த ராசியினரின் நீண்ட கால ஆசைகள் இந்த காலகட்டத்தில் நிறைவேறும்.
தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல நல்ல செய்திகள் வந்து சேரும். இவர்கள் இதுவரை அனுபவித்த கடன் தொல்லைகள் முடிவுக்கு வரும்.
தொழில் ரீதியில் அமோக முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும்.
சிம்மம்

சனி ஜெயந்தி நாளில் சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்கள் தொழிலில் எதிர்பாராத வகையில் வெற்றிகள் குவியும்.
வெளிநாட்டு வேலைக்காக நீண்ட காலம் போராடியவர்களுக்கு மனதுக்கு பிடித்த தொழில் அமைவதற்கு வாய்ப்புள்ளது. பல ஆண்டுகள் கடின உழைப்புக்கு இந்த காலகட்டத்தில் பலன் கிடைக்கும்.
நிதி நிலையில் இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு அசுர வளர்ச்சி உண்டாகும். புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான யோகம் கூடி வரும்.
மகரம்

சனி ஜெயந்தி நாளில் மகர ராசியின் 5 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உறவுகளிடத்தில் இதுவரை காலமும் இருந்துவந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்
புதிய தொழிலை ஆரம்பிப்பதற்கு இந்த காலகட்டம் சிறப்பானதாக இருக்கும். சனியின் ஆசியால் நிதி நிலையில் உயர்வு உண்டாகும்.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் நிச்சயம் வெற்றியை கொடுக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |