நாளை இரு கிரகங்களின் அரிய யோகம்: எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்?
ஏப்ரல் 30ஆம் தேதி புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் குறிப்பிட்ட சில ராசிகள் அவர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை பெறப்போகின்றனர்.

புதாதித்ய ராஜயோகம்
ஜோதிடத்தில் கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றி கொள்ளும். இது 12 ராசிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவரும்.
இப்படி கிரகங்கள் மாற்றமடைவது கல ராஜயோகங்களை உருவாக்கும். அந்த வகையில், சூரியன் புதன் ஒரே நேரத்தில் பெயர்ச்சி அடைவதால், புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது.

இது ஏப்ரல் 30ஆம் தேதி நாளை உருவாகிறது. இந்த ராஜயோகத்தால் செல்வம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் இதுவரை பிரச்சனை இருந்தவர்களுக்கு இந்த ராஜயோகம் நல்லின்பத்தை கொடுக்கும்.
இவை மேஷம், சிம்மம், கடகம் ஆகிய ராசிகளுக்கு சிறந்த பலனை கொடுக்கும் என ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ராசிகளுக்கும் இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். அதே நேரத்தில், உங்களுக்கு தொட்டதெல்லாம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

மேஷம்
- புதாதித்ய ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். உங்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மேலும் தன்னம்பிக்கை, தைரியத்தை அதிகரிக்கும். வேலையில் சிறந்து விளங்குவீர்கள். புதிய தொழில் தொடங்க சிறப்பாக இருக்கும். திருமண தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
சிம்மம்
- சிம்ம ராசிக்காரர்களுக்கு புதாத்திய ராஜயோகம் செல்வம், அதிர்ஷ்டத்தை கொடுக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க சிறந்த நேரம். மே மாதம் பொற்காலம் நிறைந்த மாதமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
கடகம்
- புதாதித்ய ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பாராட்டுவீர்கள். புதிய வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு வேலை எதிர்பார்புகள் நிறைவேறும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).