சூரியன்–புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் இயக்கமும், அவற்றின் சேர்க்கையால் உருவாகும் யோகங்களும் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில், கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியனும், இளவரசனாகக் கருதப்படும் புதனும் இணைவதால் உருவாகும் யோகம் புதாதித்ய ராஜயோகம் எனப்படுகிறது. இந்த யோகம் தொழில், வியாபாரம் மற்றும் நிதி நிலை உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

செப்டம்பர் மாதத்தில் இந்த ராஜயோகம் கன்னி ராசியில் உருவாகவுள்ளது. பஞ்சாங்கத்தின்படி, செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் கன்னி ராசிக்குள் நுழைகிறார். அப்போது ஏற்கனவே கன்னி ராசியில் இருக்கும் புதனுடன் சூரியன் இணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகும்.
இந்த யோகம் செப்டம்பர் 26ஆம் தேதி வரை நீடிக்கும். அதன் பின்னர் புதன் துலாம் ராசிக்குள் நுழைவார். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் அதிர்ஷ்டமான பலன்களைத் தரக்கூடும்.
அப்படி கன்னி ராசியில் சூரியன் - புதன் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி

கன்னி ராசியின் முதல் வீட்டில் புதன்–சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும்.
பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். நீண்டகால உழைப்புக்கான பலன் கிடைப்பதுடன், நிலுவையில் இருந்த பணிகளும் வெற்றிகரமாக நிறைவடையும்.
தொழிலதிபர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். நிதி நிலையில் முன்னேற்றமும், புதிய வருமான வாய்ப்புகள் தானாக உருவாகும்.
சிம்மம்

சிம்ம ராசியின் 2-வது வீட்டில் புதன்–சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் பணியிடத்தில் தன்னம்பிக்கையும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
உயர் அதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய திட்டங்கள் மூலம் நல்ல பெரிய தொகை லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 11-வது வீட்டில் புதன்–சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டடாகும்.
உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் முக்கியப் பணிகளை வெற்றிகரமாக முடித்து, உழைப்புக்கான பலனைப் பெறுவீர்கள். நிதி நிலையில் உயர்வு கிடைக்கும். குறிப்பாக முன்னைய முதலீடுகளில் இருந்து லாபமும் கிடைக்கும்.
வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் நிதி முடிவுகளை எடுக்கும்போது எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
கும்பம்
கும்ப ராசியின் 8-வது வீட்டில் புதன்–சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் நிதி ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபம் கிடைக்கும்.
பண விஷயங்களில் அவசர முடிவுகளைத் தவிர்த்து, நன்கு திட்டமிட்டு செயல்பட்டால் நிதி நிலையில் அமோக முன்னேற்றம் உண்டாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |