மிதுன ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகும் புதன் - எந்த ராசிக்கு என்ன பலன்? சனியால் ஆபத்தா?

astrology
By Nivetha May 23, 2021 11:50 PM GMT
Report

 புதன் மே 26ம் தேதி காலை 7.50 மணிக்கு ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

அதன் பின்னர் மே 30ம் தேதி மிதுனம், ரிஷபத்தில் வக்ர கதி அடைகிறார். இதனால் நற்பலன்களைப் பெறக்கூடிய ராசிக்காரர்கள் யார் என பார்க்கலாம்.

புதன் கிரகம் மிதுனம் கன்னி இரு வீடுகளுக்கு சொந்தமாகும் கன்னியில் புதன் கிரகம் உச்ச பலம் பெறுகிறது மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சி பலம் பெறுகிறது.

புதன் மீனத்தில் நீச்சமாகிறது. புதன் கிரகத்திற்கு நண்பா்கள் சூாியன் சுக்கிரன். புதன் கிரகத்திற்கு நன்மை தீமை கலந்து தரும் சம கிரகங்கள் சனி குரு செவ்வாய்.

புதன் கிரகத்திற்கு தீமை செய்யும் பகை கிரகம் சந்திரன். மிதுன ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகும் புதன் பகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.  

மேஷம்

மேஷம் ராசிக்கு புதன் 3 மற்றும் 6 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்வதால் நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். நண்பா்கள் உதவி கிடைக்கும்.

உத்தியோகத்திலிருப்பவா்களுக்கு பிரச்னை ஏற்படும். பண வருவாய்க்கு பஞ்சமிருக்காது என்றாலும் கடன் தொல்லை அதிகாிக்கும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் இல்லாவிட்டால் மருத்துவ செலவு அதிகரிக்கும். பசுவிற்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுக்கவும்.

ரிஷபம்

சுக்கிர பகவானை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, புதன் உங்கள் ராசிக்கு 2வது இடத்தில் வாக்கு ஸ்தானத்தில் அமர்வது உற்சாகமான கால கட்டமாகும்.

பேச்சில் இனிமை கூடும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்.

சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். பணவருவாயும், சொத்து சோ்க்கை உண்டு. உதவிகள் வந்து சேரும். இந்த கால கட்டத்தில் எதிா்பாராத உடல் உபாதை ஏற்படும். உடல் நலனில் அக்கறை செலுத்தவும். புதன்கிழமை பெருமாளை வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும்.

மிதுனம்

ராசி அதிபதி ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் அற்புத பலனை தர உள்ளார். மிதுனத்தில் புதன் வருவதால் உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். உங்கள் ராசியில் அமரும் புத பகவானால் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் நீங்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு தேவை.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களின் பேச்சு திறமையால் புதிய வாய்ப்பு, வருமானம் அதிகரிக்கும். தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கு சாதகமான நேரம். பசுவுக்கு அகத்திக்கீரை, தீவனம் கொடுக்கலாம்.

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, புதன் உங்கள் ராசிக்கு 12, 3ஆம் வீட்டு அதிபதி. உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும்.

சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். அலுவலகத்தில் பாலிடிக்ஸ் அதிகரிக்கும். எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும்.

சிறிய, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வம்பு வழக்குகளால் பிரச்னை அதிகாிக்கும். உடல் உபாதை ஏற்படும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தம்பதியரிடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து செல்லும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வணங்கவும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு 2 மற்றும் 11ம் வீட்டின் அதிபதி புதன் பகவான். இவர் தற்போது 11ம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும்.

பண வருவாய் உண்டு. எதிா்பாா்த்த வகையில் பணவருவாய் உண்டு. திடீா் வாய்ப்பு தேடி வரும். வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும்.

காதல் முயற்சிகள் கைகூடும் திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம். நன்மைகள் நடைபெற பச்சை நிற ஆடைகளை அணியவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வரும். வேலை விசயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல வெற்றியைத் தரும். இந்த காலத்தில் உங்களுக்கு கண் திருஷ்டி ஏற்படும் ஆஞ்சனேயரை வழிபட நன்மைகள் நடைபெறும்.

கன்னி

புதன் உங்கள் ராசிக்கு அதிபதி. 10ஆம் வீட்டு அதிபதி. ராசி நாதன் புதன் சஞ்சாரம் நிகழ்வது அற்புத பலனைத் தருவதாக இருக்கும். கர்ம, தொழில் ஸ்தானத்தில் இந்த சஞ்சாரம் நிகழ்வது உங்களின் தொழில் விவகாரங்களில் நன்மை அடையலாம். புதன் 10வது இடத்தில் அமர்கிறார்.

வீடு, நிலம், வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான இடமாகும். சகல செளபாக்கியம் கிடைக்கும். பண வருவாய் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். ஆடை ஆபரணம் சோ்க்கை ஏற்படும்.

திருமணம் சுபகாரியங்கள் கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். பெருமாளை புதன்கிழமைகளில் வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும். பத்திரிகை, எழுத்தாளர்கள் மற்றும் மென்பொருள் போன்ற பணிகளில் உள்ள நபர்கள் வெற்றி பெறுவார்கள். செலவுகளும் குறைய வாய்ப்புள்ளது. குழந்தைகள் மூலம் மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்

துலாம் ராசிக்கு 9 மற்றும் 12 ஆகிய ராசிக்கு அதிபதியான புதன் பகவான் 9ம் வீடான பாக்கிய, தந்தை ஸ்தானத்தில் சஞ்சரித்து வருகிறார். புதன் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் அமர்வது நன்மையை தரக்கூடிய அம்சமாகும். வருமானம் அதிகரிக்கும் எந்த பக்கமாவது இருந்து பணம் வந்து கொண்டேயிருக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும்.

பூா்வீக சொத்தில் பிரச்னைகள் தலைதூக்கும். அப்பாவின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். சகோதர வழியில் ஆதாயம் ஏற்பட்டாலும் திருப்தி இருக்காது.

தொழில் தடை ஏற்படும் முயற்சிகளில் கவனக்குறைவு ஏற்படும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும் உங்களின் சிந்தனை, திறமை, ஆளுமை அதிகரிக்கும். தொழில், வியாபார கூட்டாளிகளின் உறவு வலுபடும். மேலும் உங்களுக்காக லாபம் சிறப்பாக இருக்கும். உடல் நல விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டியது நல்லது. பிரச்சினைகளை சமாளிக்க புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் பாதிப்புகள் குறையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு புதன் 8 மற்றும் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார்.

திடீா் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். கணவரை கூட்டுக்கொண்டு கடை வீதிக்கு சென்று பர்ஸை காலி செய்யுங்கள் அந்த அளவிற்கு ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வருவாய் திருப்தி தரும் பிள்ளைகளின் சாதனை பெருமைப்பட வைக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

தனுசு

குருவை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, புதன் பகவான் உங்கள் ராசிக்கு 7 ஆம் வீட்டு அதிபதி. களத்திர ஸ்தான அதிபதி களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார்.

தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள்.

பயணத்தில் எச்சாிக்கை தேவை. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். நண்பா்கள் எதிரிகளாகும் நேரம் இது. கூட்டுத்தொழிலி பங்குதாரா்களிடம் எச்சாிக்கையாக இருக்கவும். பணப்பிரச்னை தலையெடுக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். பாதிப்புகள் குறைய புதன் காயத்ரி மந்திரத்தை கூறி பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வணங்கலாம்.

மகரம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, புதன் உங்கள் ராசிக்கு ஆறு மற்றும் 9ஆம் வீட்டு அதிபதி. 6ஆம் வீட்டில் புதன் பகவானின் சஞ்சாரம் நிகழ்கிறது. இதனால் உங்கள் வேலையில் சில போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.

6வது இடம் ருண ரோக ஸ்தானம். தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. இது திருப்தியான காலமாகும். பண வரவு அதிகரிக்கும். சிறிய முதலீடு செய்தால், நல்ல பலனைப் பெற்றிடலாம்.

பரிசுகள் மற்றும் சலுகைகளைப் பெறலாம். உறவில் சில சிக்கலைச் சந்தித்தாலும், அன்னியோன்னியம் அதிகரிக்கும். அரசாங்க தேர்வுகளுக்குத் தயாராகும் போட்டியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல காலம். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு செல்வது அதிக நன்மையை தரும்.

கும்பம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, புதன் உங்கள் ராசிக்கு 5 மற்றும் எட்டாம் வீட்டு அதிபதி, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் அமர்வதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும்.

வீட்டில் தம்பதியர் இடையே பிரச்சினை வந்து போகும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்து போவது நல்லது. புதன்கிழமைகளில் பச்சைப்பயறு வைத்து புதனை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.  

மீனம்

மீன ராசிக்கு புதன் நான்கு மற்றும் 7ஆம் வீட்டு அதிபதி. சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால் வீடு மற்றும் பணி இடத்தில் ஆறுதலான, சுகமான பலனைத் தரும். அம்மாவின் ஆரோக்கியம் மேம்படும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம்.

வேலைகளில் புரமோசன் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு உயரும். உறவினா் வருகை உண்டு. பணம் வருவாய் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவினமும் அதிகாிக்கும். பண நெருக்கடிகள் நீங்கும்.

நிதி சார்ந்த விஷயங்களில் நன்மை உண்டாகும். மன தைரியம் அதிகரிக்கும். சோம்பல் விலகி சுறுசுறுப்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் சந்தோஷ சம்பவங்கள் அதிகரிக்கும். வீட்டில் தினசரியும் துளசி மாடத்திற்கு விளக்கேற்றி வணங்குங்கள்.

மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US