நள்ளிரவில் மலர்ந்த அதிசயம்! வரம் கேட்டு குவிந்த மக்கள்
தமிழகத்தில் மிக அபூர்வமான பிரம்ப கமலம் பூ நள்ளிரவில் பூத்ததை மக்கள் அதிசயத்துடன் கண்டு செல்கின்றனர்.
பிரம்மனின் நாடிக்கொடியான பிரம்ம கமலம் பூக்கள், இளவேனில் காலத்தில் மட்டுமே பூத்துக் குலுங்கும்.
நள்ளிரவில் பூக்கும் இவைகள், அதிகாலைக்குள் உதிர்ந்து விடும், இதனை பார்ப்பது என்பதே மிகவும் அரிதான ஒன்று.
பூவின் நடுவில் பார்த்தால் பிரம்மா படுத்திருப்பது போன்றும். அதன் மேல் நாகம் படம் எடுத்திருப்பது போன்றும் காணப்படும்.
மிக வாசனையுடன் இருக்கும் இப்பூ பூத்திருக்கும் போது, நாம் எது வேண்டினாலும் நினைத்து நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த சிறப்பு மிக்க பூவானது தமிழகத்தின் சீர்காழியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நள்ளிரவில் பூத்துள்ளது.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட செடியிலிருந்து பூ பூத்துள்ளதால் பள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேலு உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இத்தகவல் காட்டுத்தீ போல் பரவ, அப்பகுதி மக்கள், பள்ளி மாணாக்கர்களின் பெற்றோர்கள் என அனைவரும் வருகை தந்து தங்களுக்கு தேவையானதை வேண்டி வணங்கி சென்றார்களாம்.
தொடர்ந்து 2 மணிக்கு மேல் பிரம்ம கமலம் மலர் சிறிது சிறிதாக தனது இதழ்களை சுருக்கி பின்னர் உதிர்ந்துவிட்டதாம்.