டீ கடையில் வேலை செய்யும் பொறியியல் மாணவி! ஒரு டீ எவ்வளவு தெரியுமா?
பீகாரை சேர்ந்த பொறியியல் மாணவி ஒருவர் சொந்தமாக டீ கடை நடத்தி வரும் தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தினை கொடுத்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்களிடையே பெரும் தொழிலதிபர்களாக வேண்டும் என்ற கனவு இருந்து வருகிறது.
சிறிய ஐடியாவை மூலதனமாக கொண்டு, தொழிலை துவங்கி அதில், மிகப்பெரும் வெற்றியடைந்த பல நபர்களை சமகாலத்தில் சுட்டிக்காட்ட முடியும்.
இதனாலேயே புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து, மாணவர்கள் அதிகளவில் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த பெண்
அந்த வகையில் பீகாரை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய டீ கடையை துவங்கியுள்ளார்.
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் வர்த்திகா சிங். சிறுவயதில் இருந்து சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்த வர்த்திகா தற்போது ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் பிடெக் படித்து வருகிறார்.
இருப்பினும் தன்னுடைய கனவுகளை நிறைவேற்ற காத்திருக்க முடியாத வர்த்திகா தற்போது தனது சொந்த டீ கடையை துவங்கியுள்ளார்.
பரிதாபாத்தில் இவர் அமைத்துள்ள கடைக்கு B.Tech Chaiwali எனப் பெயர்சூட்டியுள்ளார். இதனிடையே இவருடைய கடைக்கு மக்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஒரு டீ எவ்வளவு தெரியுமா?
தினந்தோறும் மாலை 5.30 மணிமுதல் இரவு 9 மணிவரையில் கடையை நடத்திவரும் இவர் சாதாரண டீயை 10 ரூபாய்க்கும், லெமன் டீயை 20 ரூபாய்க்கும் விற்பனை செய்துவருகிறார்.
இவருடைய முயற்சிக்கு பலரும் பாராட்டும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.