99 ரூபாய் மட்டுமே! BSNLன் சூப்பரான திட்டம்
டெலிகொம் நிறுவனங்கள் அனைத்தும் அண்மைக் காலத்தில் தங்களது கட்டணங்களை உயர்த்தியுள்ளன.
இதனால் ரீசார்ஜ் செய்ய விரும்புவோர் முன்னர் செலுத்தியதைப் பார்க்கிலும் அதிகமான கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதிலும் கூடுதல் கட்டணம் செலுத்தி பெறப்படும் இந்த ப்ளானில் எந்தவிதமான சலுகைகளும் இல்லை என்பது கொடுமை.
டெலிகொம் நிறுவனங்களின் ப்ளானிக் வேலிடிட்டியை 31 நாட்களாக மாற்ற வேண்டுமென வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்தும், அதை டெலிகொம் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை.
இவ்வாறு கவலைக் கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய ப்ளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அதிக சலுகைகளை வழங்குவதாகவும் கட்டணம் மிக மிகக் குறைவாகவும் உள்ளது என்பதே அந்தத் தகவல்.
99 ரூபாய் ப்ளான் - பிஎஸ்என்எல் சிம்மை செகண்டரியாக பயன்படுத்த விரும்புபவர்கள் வெறும் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும்போது 365 நாட்களுக்கான வேலிடிட்டியுடன் 3 ஜிபி டேட்டாவும் மாதத்துக்கு 30 குறுஞ்செய்திகள் இலவசமாகவும் 300 நிமிடங்கள் வரை தொலைபேசி பேசும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பிஎஸ்என்எல் சிம்கார்ட் ஒரு வருடத்துக்கு மேலாக செயலில் இருக்கும் பட்சத்தில் அன்லிமிட்டட் மற்றும் இலவச டேட்டாவும் பல கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும் என அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியோவின் வருகையின் பின்னர் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இன்கமிங் கோலை பெறுவதற்கும் 99 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையை ஏற்படுத்தியது.
அதனாலேயே தங்களது செகண்டரி சிம்மை செயலில் வைத்திருப்பதற்காகவே மாதா மாதம் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து வந்தனர். எனவே இதற்கெல்லாம் மிகவும் சரியான திட்டமாக பிஎஸ்என்எல் இந்த 99ரூபாய் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.