கணவர் வீட்டிற்கு பிரிந்து செல்லும் தங்கை... நடுரோட்டில் கண்ணீர் சிந்தும் அண்ணன்! கலங்க வைக்கும் பாசம்
அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. அண்ணன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் தங்கைகளும், தங்கைகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் அண்ணன்களும் இங்கு அதிகம்.
வளர்ந்த பின்பு தங்கள் தங்கைக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் அண்ணன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து மிளிர்கின்றனர். அண்ணன்களின் பாசம் அந்த வகையில் அளவிட முடியாது.
இங்க தன் தங்கைக்கு நல்ல வரன் பார்த்து திருமணம் நடத்திய அண்ணன், தொடர்ந்து சகோதிரி தன் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்வதை நினைத்து கதறி அழுகிறார்.
இதை அண்ணனின் நண்பர் ஒருவர் செல்போனில் படம் எடுக்க அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனாலும் இப்படி ஒரு பாசக்கார அண்ணன், தங்கை இந்த காலத்திலுமா? என திருமணத்துக்கு வந்தவர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.