6 வயது குழந்தையின் முன்பு கர்ப்பிணி அண்ணியை துடிதுடிக்க வைத்த கொழுந்தன்: இரவு முழுவதும் இறந்த தாயை பாதுகாத்த குழந்தை
சிறுமியின் கண்முன்னே தாயைக் கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆன சித்தப்பா, இரவு முழுவதும் தாயின் பிணத்தோடு சிறுமி காவல் காத்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் பரேலி, சுபாஷ்நகர் பகுதியில் வினிதா(26) என்ற கர்ப்பிணி பெண், தன்னுடைய 6 வயது மகளுடன் வசித்து வருகின்றார்.
அவரின் கணவரின் தம்பி ஆகாஷ் குமாருக்கும், அந்த பெண்ணுக்கும் சில கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை இருந்து வந்த நிலையில், கணவர் இல்லாத நேரத்தில் வந்து அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
சம்பவத்தன்று குறித்த பெண்ணின் மாமியார் நர்ஸாக பணிபுரிவதால், இரவு நேர வேலைக்கு சென்றுள்ள நிலையில், ஆகாஷ் குமார் வனிதாவுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
அப்போது அருகில் இருந்த குழவி கல்லை எடுத்து வினிதாவின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். குறித்த சம்பவம் அனைத்தும் அவரது 6 வயது குழந்தையின் கண்முன்னே நடைபெற்றுள்ளது.
ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த தாயின் சடலத்திற்கு அருகே அமர்ந்து இரவு முழுவதும் குழந்தை பாதுகாத்துள்ளது.
மறுநாள் காலையில் இரவு வேலை முடித்து வீட்டுக்கு வந்த அந்த பெண்ணின் மாமியார், அங்கு தனது மருமகள் இறந்து கிடப்பதை பார்த்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.