தங்கையை பாதுகாக்கும் அண்ணன்! வைரலாகும் வீடியோ காட்சி
சைக்கிளில் செல்லும் தனது தங்கையை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் அண்ணன் ஒருவரின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அண்ணன் தங்கை பாசம்
அண்ணன் தங்கை உறவு என்பது தந்தை மகள் உறவுக்கு சமமானது. எத்தனை சண்டைகள் வந்தாலும் அடுத்த கணமே அரவணைக்கும் உறவு அண்ணன் மட்டுமே.
அண்ணன் எப்போதும் தனது தங்கையை பாதுகாத்துக் கொண்டிருப்பார். அந்தவகையில் உருது நாவல்கள் என்ற டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ அந்தக் கூற்றை கண்முன் காட்டியிருக்கின்றது.
ஒன்றில் சகோதரர் ஒருவர் தனது சிறிய சகோதரி தனது சைக்கிளில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வீடியோ ஒன்லைனில் வைரலாகி வருகிறது.
அவர் தனது சகோதரி மீது கொண்டிருந்த அன்பும் பாதுகாப்பு உணர்வும் அந்தக் காட்சியில் தெளிவாகத் தெரிகின்றது.
குறித்த வீடியோ 22 வினாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு சிறுவன் தனது சிறிய சகோதரியுடன் சைக்கிளில் பயணிப்பதைக் கொண்டிருக்கும் வேளையில் பின்னால் அமர்ந்திருக்கும் சகோதரியின் குட்டிக் கால்களை சைக்கிளிலுடன் சேர்த்து கட்டி அவள் பாதுகாப்பாக இருக்கவும், சைக்கிளில் இருந்து விழாத படி அழைத்துச் செல்கின்றனர்.
Brother's Love pic.twitter.com/rATH1A83my
— Urdu Novels (@urdunovels) January 2, 2023
அந்த வீடியோவானது 14 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர் பார்த்துள்ளனர்.