தங்கையின் திருமணத்திற்கு வித்தியாசமாக சீதனம் கொடுத்து அசத்திய அண்ணன்: அப்படி என்ன கொடுத்திருப்பார்?
அண்ணன் தங்கை உறவு என்பது தந்தை மகள் உறவுக்கு சமமானது.
எத்தனை சண்டைகள் வந்தாலும் அடுத்த கணமே அரவணைக்கும் உறவு அண்ணன் மட்டுமே!
எந்த உறவிற்கும் பிரிவு என்பது தாங்கிக்கொள்ள முடியாததொன்றாகும்.
அதுபோலவே திருமணம் முடித்து தங்கை இன்னொரு வீட்டுக்குச் செல்லும் போது வெளியில் கட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் துடிக்கும் அண்ணன்கள் ஏராளம்.
தங்கை திருமணமாகி செல்லும்போது தன்னால் முடிந்தவற்றையும் சீதனமாக கொடுத்து அழகு பார்க்கும் அண்ணன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
திருமணம் என்றாலே பெண் வீட்டார்கள் கார், நகை, பணம், சீர்வரிசை பாத்திரங்கள் வழங்குவதே வழக்கம்.
ஆனால் இந்த திருமணத்தில் அண்ணன் வழங்கிய சீதனம் தொடர்பில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சீதனம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் சுரேஷ் - செல்வி தம்பதியினரின் மகளான விரேஸ்மாவிற்கு நேற்று முன்தினம் திருமண நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த பின்னர் மணப்பெண்ணின் அண்ணன் வித்தியாசமாக சீதனம் வழங்கியுள்ளார்.
மணப்பெண்ணின் அண்ணன் ரோயல் திடீரென மேடைக்கு தான் தங்கைக்காக வளர்த்த சீதனங்களை ஒன்றன் பின் ஒன்றாக மேடையேற்றியுள்ளார்.
திருமணத்திற்கு வந்த அனைவரும் இந்த செயலை பார்த்து வாயடைந்துப்போனார்கள். இது போன்ற சீதனத்தை இதுவரை தாங்கள் பார்த்ததேயில்லை எனவும் தங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டார்கள்.
தமிழர்களின் வீரத்திற்கு அடையாளமான ஜல்லிக்கட்டு காளை, சண்டை சேவல், சண்டை கிடாய், கன்னி நாய்கள் ஆகியவற்றை வீட்டிலிருந்து வளர்த்து வந்துள்ளார்.
அவற்றில் சிலவற்றை தனது தங்கையின் பிறந்த வீட்டு சீதனமாக வழங்கியுள்ளார்.
மணமக்களுக்கு வாழ்த்து
தனது தங்கையின் திருமண வரவேற்பன்று ஜல்லிக்கட்டு காளை, கன்னி நாய்கள், சண்டை சேவல் ஆகியவற்றை மேடை ஏற்றி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருக்கிறது. இதுவரை எத்தனையோ சீர்வரிசைகளை பார்த்திருக்கிறோம்.
ஆனால் இந்த மாதிரியான சீர்வரிசையை நாங்கள் பார்க்கவே இல்லை என பலரும் இவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.