ரிவி ரிமோட்டால் பறிபோன சிறுமியின் உயிர்... நடந்தது என்ன?
இந்தியாவில் வீட்டில் ரிவி ரிமோட் உடைந்துவிட்டதால் பெற்றோருக்கு பயந்து சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிமோட்டை உடைத்த சிறுமி
இந்திய மாநிலம் தமிழகத்தில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பாசக்குட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு திருமணமாகி கவியரசி, பிரபா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இருவரும் அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் படித்து வந்துள்ளனர். நேற்றைய தினம் பெற்றோர் இருவரும் வெளியே சென்றுள்ளனர்.
பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த கவியரசி, பிரபா இருவரும் ரிவி பார்த்துக் கொண்டிருக்கையில், இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் பிரபா ரிவி ரிமோட்டை உடைத்துள்ளார். இதனால் பெற்றோர்கள் வந்து தண்டிப்பார்கள் என்ற பயத்தில் இருந்த பிரபா வீட்டை உள்பக்கமாக தாழிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
வெளியே சென்று வீடு திரும்பிய பெற்றோர்கள் அதிர்ச்சி காத்திருந்த நிலையில், சிறிய விடயத்திற்காக சிறுமி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.