அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி.., வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு?
பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்..,
பள்ளி மாணவர்களின் காலை உணவு மற்றும் சத்துணவு திட்டத்தை மேம்படுத்துவது குறித்து முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை தரத்தை உயர்த்துவது தொடர்பான பரிந்துரைகளையும் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது ஒரு மாணவரின் காலை உணவுக்காக ரூ.11.50 மட்டுமே ஒதுக்கப்படுகிறது, அந்த தொகையில் சத்தான உணவை வழங்குவது சவாலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காலை உணவை ஊட்டச்சத்து மற்றும் அறுசுவை நிறைந்ததாக மாற்றுவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், வாரம் ஒரு முறை சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும், அதற்காக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.
இந்த கோரிக்கை வரவிருக்கும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.