செய்தித்தாளை வாசிக்க கூறிய மணமகள்... தடுமாறிய மகன்! மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு
உத்திர பிரதேச மாநிலத்தில் மணமகன் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்த காரணத்தினால் மணப்பெண் திருமணத்தினை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான உத்திரபிரதேசத்தில் அவுரையா மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜுன் சிங் என்பவர் தனது மகள் அர்ச்சனாவை சிவம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளார்.
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் மாப்பிள்ளை பெண் வீட்டார், இருசக்கர வாகனம் உட்பட பல பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மூக்கு கண்ணாடியுடன் வந்துள்ளார்.
இதனால் மாப்பிள்ளையின் பார்வைதிறனை சந்தேகமடைந்த மணப்பெண் அவரிடம் செய்தித்தாளை கொடுத்து கண்ணாடி இல்லாமல் படிக்க கோரியுள்ளார். அப்போது மணமகன் கண்குறைபாடு இருந்ததால் வாசிப்பதில் சற்று தடுமாறியுள்ளார்.
இந்நிலையில் இவ்வாறான மாப்பிள்ளையை திருமணம் செய்ய மணப்பெண் அர்ச்சனா மறுத்துள்ளார். இதனால் குறித்த திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது பேரதிர்ச்சியாக உள்ளது.