திருமணத்திற்கு பார்சலாக வந்த மணப்பெண்.. திக் திக் நிமிடங்களில் நடந்த சம்பவம்

DHUSHI
Report this article
திருமணத்திற்கு பார்சலாக வந்த மணப்பெண்ணை கண்டு இலங்கைவாசிகள் மிரண்டு போயுள்ளனர்.
திருமணம் என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களினது வாழ்க்கையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சிலரது வாழ்க்கையில் திருமணம் பாரிய திருப்பு முனையாகவும் அமைகிறது. இது சில சமயங்களில், சிறப்பாகவும் அதற்கு எதிர்மறையாகவும் இருக்கலாம். இந்த திருப்பங்கள் அவர்களின் வாழ்க்கை துணையின் புரிந்துணர்வில் அடங்கியுள்ளது.
தற்போது வளர்ந்து வரும் கலாச்சாரத்தில் திருமணத்தை நாளுக்கு நாள் வித்தியாசமாக செய்து வருகிறார்கள்.
பார்சலாக வந்த மணப்பெண்
அந்த வகையில், இலங்கையில் நடந்த பௌத்த மத திருமணத்தில், மணப்பெண்ணை அலங்காரம் செய்து பார்சலாக அனுப்பியுள்ளனர்.
மாப்பிள்ளை வந்தவுடன் பார்சலை பிரித்து தன்னுடைய துணையை பூங்கொத்து கொடுத்து அழைத்து செல்கிறார். இப்படியாக அந்த காணொளியை வெளியாகியுள்ளது. இதனால் இவர்களின் திருமணம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாகவும் மாறியுள்ளது.
திருமணத்தில் மணமக்களின் வருகை பெரிதாக பேசப்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் பார்சலாக வந்த மணப்பெண்ணை பார்த்து பலரும் வியந்து போயுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |