மகளின் திருமணத்திற்கு பந்தயம் கட்டிய பெற்றோர் - ஆடிப்போன பெண் எடுத்த இறுதி முடிவு! வைரல்
மகளின் திருமணத்தில் பெற்றோர்கள் பந்தயம் கட்டி திருமணத்தையே நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருமணங்களில் பல காரணங்களால் கடை நேரத்தில் நிற்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஒரு இளம்பெண்ணுக்கு வித்தியாசமான சோதனை ஏற்பட்டு திருமணத்தையே நிறுத்திய சம்பவம் தான் பரவலாக பேசபட்டு வருகிறது.
இளம்பெண் பகிர்ந்த அந்த தகவலின்படி, பிரபல சமூக வலைத்தளமான ரெட்டிட் (Reddit) -ல் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகர சம்பவத்தை கூறியுள்ளார்.
பந்தயம் கட்டிய பெற்றோர்கள்
அதாவது அந்த பெண்ணுடைய பெற்றோர்கள் வித்தியாசமான பந்தயத்தை கட்டியிருக்கிறார்கள். அதாவது, இந்த திருமணம் எவ்வளவு காலம் நீடிக்கும்? என்பதில் தனது பெற்றோர் பந்தயம் கட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட பதிவின்படி, என்னுடைய திருமணத்தை இந்த மாதம் நடைபெற இருந்த நிலையில், நான் அதை நிறுத்த திட்டமிட்டு இருக்கிறேன்.

திருமணத்தை நிறுத்துவேன்
எளிமையான முறையில் பதிவு திருமணம் செய்யப்போகிறேன். இதற்கு காரணம் என் பெற்றோர்கள் கட்டியிருந்த பந்தயம் தான். இதைப்பற்றி என் உறவினர் ஒருவர் தெரிவிக்கையில், என்னுடைய திருமணம் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் எனவும் என்னுடைய வருங்கால கணவர் நான் சிறந்த மனைவி இல்லை என்பதை எவ்வளவு நாளில் உணர்வார் என்றும் பெற்றோர் பந்தயம் கட்டியிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
பின் இதுகுறித்து பெற்றோரிடம் முறையிட அதற்கு விளையாட்டாக இப்படி செய்ததாக கூறியுள்ளனர்.
மேலும், அவர் வெளியிட்ட பதிவில், பொதுவாக ஆண்கள் தனக்கு வரப்போகும் மனைவி தனக்கு கீழ்ப்படிய வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் நீ அப்படியான பெண் இல்லை என பெற்றோர்கள் என்னிடம் கூறினார்கள்.

குடும்பத்திற்கு சங்கடம்
இப்படி கூறிய எனக்கு கவலையடைய வைத்துள்ளது என தெரிவித்துள்ளார். தொடர்ந்து எளிமையான முறையில் திருமணத்தை செய்யவேண்டும் என பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் இப்படி தான் திருமணம் நடக்க வேண்டும் எனவும், ரத்து செய்வதால் குடும்பத்திற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர்.
ஆனால், மணப்பெண் விடாப்பிடியாக நான் பின் வாங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார். இந்த பதிவும் வைரலாக பரவி வருகிறது.