ஆசையாக மாலை மாற்றிய மணமகன்! மணமகள் கொடுத்த தர்மஅடி: நடந்தது என்ன?
மணப்பெண் ஒருவர் மணமகன் மாலை மாற்றும் நேரத்தில் கன்னத்தில் பளார் என அடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான உத்திரபிரதேசத்தில் ஹமிர்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
குறித்த காட்சியில் மணமேடையில் மணமகனும், மணமகளும் மாலைகளுடன் நிற்கும் நிலையில், மணமகன் தனது கையில் இருந்த மாலையை மணமகளுக்கு அணிவிக்கின்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக மணமகள் கோபத்தில் மாப்பிள்ளையின் கன்னத்தில் பளார் என அடித்துள்ளார். அதுவும் ஒரு முறை அல்ல, இரண்டு முறை அறைந்துவிட்டு மேடையிலிருந்து வெளியேறிவிடுகிறார்.
இதைப் பார்த்த விருந்தினர்கள் அதிர்ச்சியில் உரைந்த நிலையில், குறித்த சம்பவத்திற்கு சரியான காரணம் தெரியவில்லை.
பின்பு சிறிது நேரத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் பொலிசார் வந்து சமாதானம் செய்ததோடு, குறித்த பெண்ணிற்கும், மாப்பிள்ளைக்கும் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.
நீரிழிவு நோயாளிகள் இந்த இனிப்பான பழங்களை சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ