முதலிரவிற்கு கொண்டுவந்த பாலில் காத்திருந்த அதிர்ச்சி... பெரும் சோகத்தின் மணமகன்
மணமகனிடம் வரதட்சணை வாங்கிக்கொண்டு மணப்பெண் முதலிரவில் எஸ்கேப் ஆகியுள்ள சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.
முதலிரவில் மயங்கிய மணமகன்
பொதுவாக பெண் வீட்டார்கள் தான் வரதட்சணை கொடுத்து பெண்ணை திருமணம் செய்து கொடுப்பார்கள். ஆனால் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கொடுத்து பெண்ணை திருமணம் செய்யும் நிகழ்வுகளும் தற்போது நடந்து வருகின்றது.
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் பரத்பூரைச் சேர்ந்த மணமகன் ஒருவர், உத்தரபிரதேசம் சுல்தான்பூரைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
பெண்ணிற்கு மணமகன் முதன்முறையாக ரூ.1 லட்சம் ரொக்கமாக கொடுத்ததுடன், மணப்பெண்ணிற்கு தங்க நகை, ஆடை, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் வரதட்சணையாக வாங்கிக் கொடுத்துள்ளார்.
எஸ்கேப் ஆகிய மணப்பெண்
இதனை வாங்கிக் கொண்ட மணப்பெண் முதலிரவிற்கு கொண்டு வந்த பாலில் மயக்க மருந்து கலந்து மணமகனுக்கு கொடுத்துள்ளார்.
பின்பு இரவோடு இரவாக நகை, பணம், பொருள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார். மயக்கம் தெளிந்த பின்பு மணமகன் பெரும் அதிர்ச்சியடைந்த நிலையில், பொலிசில் புகாரும் கொடுத்துள்ளார். தற்போது பொலிசார் மணப்பெண்ணை தேடி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |