அடுத்தடுத்து உயிரிழந்த புதுப்பெண்கள்... செய்த தவறுகள் அம்பலம்
சமூக இடைவெளியின்றி திருமணம் செய்தது மட்டுமின்றி, விருந்திற்கு உறவினர்கள் வீட்டிற்கு சென்று வந்த புதுணமத்தம்பதிகளில் புதுப்பெண்கள் இரண்டு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் நாகர்கர்நூல் மாவட்டத்தில் சேர்ந்த ஸ்ரீ வாணி என்ற பெண்ணிற்கும், தண்டூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது.
அரசின் உத்தரவினை மதிக்காமல், சமூக இடைவெளியின்றி, கும்பலாக திருமணம் நடைபெற்றதுடன், கொரோனா விழிப்புணர்வு இன்றி வீடு வீடாக விருந்திற்கும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் புதுப்பெண் ஸ்ரீ வாணி திடீரென மயங்கிவிழுந்ததால், அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தொடர்ந்து வாந்தி எடுத்துக்கொண்டிருந்த புதுப்பெண் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். திருமண பந்தலைக் கழட்டுவதற்கு முன்பாகவே புதுப்பெண் உயிரிழந்துள்ள நிலையில், அதே பந்தலை இறுதிச்சடங்கிற்கு பயன்படுத்தியதால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
குறித்த புதுப்பெண்ணிற்கு ஏற்கெனவே கொரோனா பரிசோதனை செய்ததாகவும், அதில் நெகட்டிவ் என்று வந்த நிலையில், தற்போது கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
இதே போன்று கம்மம் மாவட்டத்தில் கடந்த மாதம் திருமணம் முடிந்த புதுப்பெண் ஒருவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார்.
