பேட் கம்மின்ஸை தொடர்ந்து இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் வாங்க உதவிய பிரட் லீ.. குவியும் வாழ்த்துக்கள்
கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகரித்து நிலையில், ஆக்ஸிஜன் பற்றாகுறையால் நாளுக்கு நாள் இறப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதையடுத்து, சில நாடுகள் உதவிக்கு முன் வந்த நிலையில்,ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பேட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு 37 லட்சம் ரூபாய் கொரோனா நிதியுதவி அளித்திருந்தார்.
அவர், பலரும் என்னை போல் உதவி செய்ய முன் வருவார்கள் என தெரிவித்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீயும் உதவி செய்துள்ளார்.
அவர், கூறியதாவது, “இந்தியா எனது இரண்டாவது வீடு. நான் ஆக்டிவாக கிரிக்கெட் விளையாடி போதும், ஓய்வு பெற்ற பிறகும் கூட இந்திய மக்கள் என் மீது செலுத்துக்கின்ற அன்புக்கும், பாசத்திற்கும் எல்லையே இல்லை.
அதனால் இந்திய மக்களுக்கு என்றென்றும் என் நெஞ்சத்தில் இடம் உள்ளது. இந்தியாவை தற்போது சூழ்ந்துள்ள கொரோனா பிடியின் இறுக்கம் என்னை வருத்தமடைய செய்துள்ளது.
மேலும், இந்திய மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் வாங்க cryptorelief-க்கு இந்த நிதியை அளிக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் நாம் எல்லோரும் உதவி தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும்.
நேரம் காலம் பார்க்காமல் கொரோனாவுடன் போராடும் பணியாளர்களுக்கு எனது நன்றி. என தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். தேவையிருந்தால் மட்டும் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வெளியில் வரவும்.
இந்த முயற்சியை முன்னெடுத்த பேட் கம்மின்ஸுக்கு வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார். இவரின் உதவிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Well done @patcummins30 ?? pic.twitter.com/iCeU6933Kp
— Brett Lee (@BrettLee_58) April 27, 2021