Breast Milk Icecream: தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம்
அமெரிக்காவின் Frida மற்றும் OddFellows Ice Cream Co என இரு நிறுவனங்கள் இணைந்து தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐஸ்கிரீம் என்றால் யாருக்குதான் பிடிக்காது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பலவிதமாக சுவைகளில் ருசித்திருப்போம்.
ஆனால் அமெரிக்காவில் தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, பிரபல குழந்தைகள் நலப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Frida, OddFellows Ice Cream Coவுடன் இணைந்து இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.
உண்மையில் தாய்ப்பாலில் இருந்து இது தயாரிக்கப்படவில்லை என்றும், மாடுகளில் இருந்து பெறப்படும் liposomal bovine colostrum சேர்க்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதிகளவு சத்துக்கள் மற்றும் ஆன்டிபாடிகள் நிறைந்த மாடுகளில் இருந்து பெறப்படும் இந்த பொருள் பெண்களின் தாய்ப்பாலிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பால், க்ரீம், முட்டையின் மஞ்சள் கரு, சர்க்கரை, தேன் மற்றும் பழச்சாறுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நியூயார்க்கில் விற்பனைக்கு வந்துள்ள தாய்ப்பால் ஐஸ்கீரிமை சுவைப்பதற்கு கூட்டம் கூடினாலும் சமூகவலைத்தளங்களில் எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.