காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன?
காலை எழுந்தவுடன் பலரும் என்ன சாப்பிடலாம் என்று கேட்டால், பால், காபி, டீ என்றுதான் சொல்வீர்கள்.
ஆனால், வெறும் வயிற்றில் நீங்கள் உண்ணும் முதல் உணவு, உங்கள் குடலை பாதிக்காத அமிலச் சுரப்பு அதிகம் இல்லாத உணவாக இருக்க வேண்டும்.
அதிலும், வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளைக் காலையில் எடுத்துக்கொள்வது அவசியம்.
அந்த வகையில், இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, தவிடு நீக்காத கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகுத் தோசை மற்றும் ரொட்டி போன்ற உணவுகள் வைட்டமின் சி அதிகம் கொண்டவை.
குடலை சுத்தப்படுத்தும் உணவுகள்
மேலும், பால், தயிர், பாலாடைக் கட்டிகள்மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்தும் மூளை மற்றும் நரம்பு மண்டலத்துக்குத் தேவையான வலிமையை அளிக்கின்றன.
காலை எழுந்தவுடன் ஒரு தக்காளிப் பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதில் வைட்டமின் சி கொட்டிக்கிடக்கின்றன என்கிறார்கள்.
சப்பாத்தி இட்லி ஏற்ற சுவையான பருப்பு துவையல் - உடனே செய்வது எப்படி?
முக்கியமாக எலுமிச்சம் பழச்சாற்றுடன் நீர் சேர்த்து அருந்துவதும் உங்கள் காலைப் பொழுதை உற்சாகமாக மாற்றும்.
பருப்பு, பால், சோயாபீன்ஸ், முட்டை, முக்கியமாக இட்லி போன்றவற்றை காலை உணவாக எடுத்துக்கொண்டால், அவற்றில் இருக்கும் லைசின் என்ற புரதச்சத்து, உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.