ஈஸியான ப்ரெட் பக்கோடா! வெறும் 5 நிமிடத்தில் தயார் செய்வது எப்படி?
நொறுக்குத் தீனிகள் என்றால் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அதுவும் எளிதாக வீட்டில் செய்யக்கூடியவை என்றால் அது இன்னும் ஸ்பெஷல்தான்.
ப்ரெட்டை நாம் பட்டருடன் சாப்பிட்டிருப்போம், கறி வகைகளுடன் சாப்பிட்டிருப்போம், முட்டை, காய்கறிகள் போன்றவற்றுடனும் சாப்பிட்டிருப்போம்.
ஆனால், ப்ரெட்டில் பக்கோடா செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்? மாலை நேரத்தில் சுடசுட தேநீருடன் இந்த ப்ரெட் பக்கோடாவை கடித்தால் எப்படி இருக்கும்...நீங்களே செய்து பாருங்களேன்!
தேவையான பொருட்கள்
ப்ரெட் - 5 துண்டுகள்
கடலை மா - 4 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடலை மா - 4 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
சீரகம் - 1/2 தேக்கரண்டி
காய்கறி - கால் கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர்
செய்முறை
முதலில் காய்கறிகளை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கி நறுக்கி, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
ப்ரெட் துண்டுகள், பச்சை மிளகாய், வெங்காயம் என்பவற்றை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்தவற்றுடன் கடலை மா, வெங்காயம், மஞ்சள் தூள், சீரகம், பெருங்காயத்தூள், உப்பு செர்த்து கலந்து கொள்ளவும்.
அதற்கடுத்ததாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து உருண்டை பிடிக்கும் பதத்துக்கு பிசைய வேண்டும்.
பக்கோடா பதத்துக்கு வந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
இறுதியாக ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பக்கோடா மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு எல்லா பக்கமும் பொன்னிறமாக சிவக்க பொரித்தெடுக்கவும்.