தினமும் காலை உணவாக பிரெட் ஆம்லெட் மட்டும் சாப்பிடுவது நல்லதா கெட்டதா?
தினமும் காலை உணவிற்கு பிரெட் ஆம்லேட் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லதா? அல்லது தீங்கு ஏற்படுத்துமா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலை உணவு
காலை உணவு என்பது மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் காலை உணவாக பிரெட் ஆம்லெட் எடுத்துக் கொள்கின்றனர். இவை உடம்பிற்கு நல்லது என்றும் விரைவில் பசி ஏற்படாது என்று நினைக்கின்றனர்.
ஆனால் பிரெட் ஆம்லெட் மட்டும் உணவாக எடுத்துக்கொள்வது நல்லதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஆனால் காலை உணவாக பிரெட் ஆம்லெட் சாப்பிடுவது ஆரோக்கியமான பழக்கம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிரெட் ஆம்லெட்
பிரெட் ஆம்லெட் உடம்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும், புரதத்தேவையையும் நிறைவு செய்கின்றது. முட்டையில் புரதச்சத்து, வைட்டமின் பி, கோலின், அமினோ அமிலங்கள் போன்றவை கிடைக்கின்றது.
வெள்ளை பிரட் எடுத்துக் கொள்ளும் அதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் எளிதில் செரிமானமாவதுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலை ஏற்படும்.

பிரௌன் பிரெட் என்றால் இதில் கோதுமை சேர்க்கப்படுவதால் செரிமானத்தினை மெதுவாக்குவதுடன், வயிறு நிறைந்த உணவை அளிப்பதுடன், குடல் ஆரோக்கியத்தினையும் மேம்படுத்துகின்றது.
ஆனால் பிரெட் ஆம்லெட் செய்யும் குறைவான எண்ணெய் அல்லது பட்டர் பயன்படுத்தவும். ஏனெனில் பட்டர், எண்ணெய் போன்றவைகள் கலோரியை உயர்த்துவதுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் அதிகரிக்கின்றது.
பிரெட் ஆம்லெட் செய்யும் அதில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் அதிகமாக சேர்த்துக் கொள்வதுடன், சரியான முறையில் சமைத்து சாப்பிடுவது நல்ல பலனையும் அளிக்கின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |