ஆண்களையே பிடிக்கவில்லை என மாடல் அழகி செய்த ஆச்சரிய செயல்! அதிர்ந்துபோன நெட்டிசன்கள்
ஆண்களையே பிடிக்கவில்லை என்று பெண் ஒருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் சாவோ பாலோ பகுதியை சேர்ந்தவர் கிறிஸ் கலேரா. லாஞ்சரி மாடலான கிறிஸுக்கு பல ஆண்டுக்கால முயற்சிக்குப் பிறகு ஆண்கள் மீது நம்பிக்கை இழந்தக் காரணத்தால் ஆண்களையே வெறுத்து ஒதுக்கியுள்ளார்.
இதனையடுத்து, அவர் மணப்பெண் போன்று உடை அணிந்து தேவாலயத்தில் காத்திருந்துள்ளார். சரி மணமகன் தான் யாரோ வருவார் என தேவலாயத்தில் இருந்தவர்கள் நினைக்க கிறிஸ் தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்டார்.
மேலும், கிறிஸ் திருமணத்தின் போது தேவாலயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கிறிஸ் தெரிவிக்கையில், 'எனது திருமணம் இப்போது இணையத்தில் வைரலாகவே பலர் என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து மெசேஜ் அனுப்பத் துவங்கினார்கள்.
மேலும், என்னுடைய நாட்டை தவிர அரபு நாட்டு ஷேக் ஒருவரும், 'உங்களை நீங்கள் திருமணம் செய்து கொண்டதால் நீங்கள் விவாகரத்து செய்துகொண்டு என்னை மணந்துக்கொள்ளுங்கள்' எனக் கேட்டர். அதோடு, எனக்கு ரூ. 3 கோடிக்கும் மேல் வரதட்சணை தருகிறேன் என்றும் கூறினார்.
ஆனால், எனக்கு ஆண்கள் மீது நம்பிக்கை இல்லை. என்னை அவரால் விலைக்கு வாங்க முடியாது. நான் விற்பனைக்கு அல்ல. மேலும் என்னை நானே திருமணம் செய்து கொண்டதற்காக பலரும் என்னை கிண்டல் செய்து வருகின்றனர். எனக்கு இதுகுறித்து ஒரு கவலையும் இல்லை' எனக் கூறியுள்ளார்.
