தொண்டையில் சிக்கிய உணவு: கீழே சரிந்த நபர்! பின்பு நடந்த போராட்டம்
பிரேசிலில் உணவம் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவரின் தொண்டையில் உணவு சிக்கி உயிருக்கு போராடியவரை சாதுர்யமாக செயல்பட்டு ஊழியர்கள் காப்பாற்றியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரேசிலில் சாகோலாவில் உணவகம் ஒன்றில் 38 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக உணவு தொண்டையில் சிக்கியதால், மூச்சு திணறல் ஏற்பட்டு அங்கிருந்த மேஜையில் மயங்கியுள்ளார்.
இதனை கவனித்த வாடிக்கையாளர்கள் அவரை எழுப்ப முயன்றும் அவரை எழுப்ப முடியாமல் இருந்த நிலையில், உணவக ஊழியர்கள் பின்பு ஓடிவந்து அவரை தூக்கி கீழே சாய்த்தவாறு குலுக்கி காப்பாற்ற முயன்றனர்.
அப்போது அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து அதிகாரி ஒருவர் உடனடியாக அவரை கீழே சாய்த்தவாறு குலுக்கியுள்ளார். பின்பு குறித்த நபர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.
இக்காட்சியினை அவதானிக்கும் ஒவ்வொருவரும் உணவு அருந்தும் போது கூடுதல் கவனம் வேண்டும் என்பது இக்காட்சியில் தெரியவந்துள்ளது.