ஒரே நாளில் பிரேசிலில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. துயரத்தில் மக்கள்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை இன்று உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
மேலும், ரேசிலில் கொரோனா பரவல் மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 2 ஆயிரத்து 648 பேர் பலியாகி விட்டதாகவும் பிரேசில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேப்போல், 2 லட்சத்து 82 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 1,58,892 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். கொரோனா பரவல் தீவிரமாக உள்ள டாப் 10 நாடுகளில் 6 ஐரோப்பியாவை சேர்ந்தவை ஆகும்.