தாய்ப்பாலில் ஐஸ்கீரிம் தயாரிப்பு.. வாங்கி சுவைக்க எவ்வளவு காலம் எடுக்கும்?
தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்கிரீம்
அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஃப்ரீடா (Frida), தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தாய்ப்பால் ஐஸ்கிரீமை சுவைக்க விரும்பும் வாடிக்கையாளர்கள், சுமாராக 9 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
மாறாக இந்த ஐஸ்கீரிம் உண்மையான தாய்ப்பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறதா? என பலரும் சிந்திப்பார்கள்.
இல்லை, தாய்ப்பாலின் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொண்டு தயாரிக்கப்படவுள்ளது.
தாய்பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறதா?
வழக்கமான ஐஸ்கீரிமை விட இதில் இனிப்பு, உவர்ப்பு சுவையுடன் கால்சியம், இரும்பு, வைட்டமின் பி, வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் உள்ளடங்கப்படவுள்ளது.
இந்த தகவலை குறித்த நிறுவனம் அவர்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளது. அதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதரவுகளை வழங்கி வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
