IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்?
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
ஆபத்தில் இருப்பவர் யார்?
அந்த வகையில், படத்தில் சிறுவர்களுக்கு தொப்பி அணிவித்து கடத்தப்போவது போன்று காட்டப்பட்டுள்ளது. அப்படி பார்க்கும் பொழுது ஆபத்தில் இருக்கும் குழந்தையை நாம் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.
நாம் கொடுக்கப்பட்ட 5 வினாடிகளில் ஆபத்தில் இருக்கும் சிறுவனை கண்டுபிடித்து விட்டால் சிறுவனை காப்பாற்றலாம். அதே சமயம் உங்களுடைய நுண்ணறிவை பயன்படுத்தி ஆபத்தில் இருப்பவரை கண்டுபிடித்தால் நீங்கள் ஒரு அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து ஆபத்தில் உள்ளவர் யார் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
[
விடைக்கான காரணம்
- படத்தில் இருக்கும் காலநிலைக்கு தொப்பி அணிவது அவசியம் இல்லை. ஆனாலும் தொப்பி அணிவித்து குழந்தையின் முகத்தை மறைக்கிறார் என்றால் அவர் தான் கடத்தல்க்காரர். ஆபத்தில் இருக்கும் சிறுமி B தான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |