மூளையை உண்ணும் அமீபா... 2 வயது சிறுவன் அடுத்த பலி
அமெரிக்காவில் 2 வயது சிறுவன் மூளையை உண்ணும் அமீபா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூளையை உண்ணும் அமீபா
அமெரிக்காவின் நெவாடாவைச் சேர்ந்த Woodrow Turner Bundy என்ற 2 வயது சிறுவன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளான்.
அவரது பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், மூளைக்காய்ச்சலாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் நோய் தொற்றின் உண்மை தன்மை ஒருநாள் தாமதமாக கண்டறியப்பட்டதால், அந்த சிறுவன் 7 சிகிச்சைக்கு பின்பு கடந்த 19ம் தேதி உயிரிழந்துள்ளான்.
நெக்லேரியா ஃபோலேரி (Naegleria fowleri) மூளையை உண்ணும் அமீபாவால் ஏற்பட்ட தொற்று காரணமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
கடந்த சில வாரத்திற்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
அறிகுறிகள் என்ன?
Naegleria என்பது ஒரு சுதந்திரமாக வாழும் அமீபா ஒரு செல் உயிரியாகும். இவை சூடான நன்னீர் அதாவது ஏரிகள், ஆறுகள், வெந்நீர் ஊற்றுகள் மற்றும் மண்ணில் காணப்படுமாம்.
இந்த அமீபா வகையில் Naegleria fowleri என்பது மட்டுமே மனிதர்களை பாதிக்கின்றது. இவை நாம் ஏரி, ஆறு, நீச்சள் குளம் இவற்றில் நீருக்கடியில் தலையை வைக்கும் போது, இவை மூக்கு வழியாக மனிதர்களின் மூளைக்கு சென்று திசுக்களை அழித்து, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துகின்றது.
தொற்று ஏற்பட்ட 5 நாட்களுக்கு பின்பே அறிகுறிகள் காணப்படும். ஆனால் இந்த அறிகுளிகள் ஒன்று முதல் 12 நாட்களுக்குள் தொடங்கலாம். பாதிப்பு தெரிந்தவுடன், 5 நாட்களில் உயிரிழக்கும் நிலை ஏற்படுகின்றது. சில நோயாளிகள் 18 நாட்களில் உயிரிழக்கவும் செய்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |