எப்பொழுதும் சோர்வாகவே இருக்கிறீர்களா? மூளை பாரிய ஆபத்தில் இருக்கிறதாம்! ஜாக்கிரதை
நமது உடம்பில் இருக்கும் இதயம், கல்லீரல், சிறுநீரகம் என சில உறுப்புகள் மீது அதிக அக்கறையுடன் காணப்படுவோம். ஏனெனில் தற்போது வரும் நோய்கள் பாரிய ஆபத்திலும், உயிர் சேதத்திலும் கொண்டு போய் விடுகின்றன.
உடம்பில் கழிவுகளை வெளியேற்றும் உறுப்பு என்று நினைத்தாலே கல்லீரல், சிறுநீரகம் தான் நம் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வரும்.
இதுஒருபுறம் இருக்க மூளையிலும் கழிவு இருக்கும் என்பதை நம்மில் அதிகமானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மூளை கழிவுகள் (Brain Detox) என்றால் என்ன? என்பது தெரியாமல் இருப்பவர்கள் இப்பதிவினில் மிகவம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மூளை சரியாக செயல்படாமல் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?
- எப்பொழுதும் சோர்வாக இருப்பது
- தலைவலி
- சரியான தூக்கமின்மை (8 மணி நேரம் படுக்கையில் இருந்தாலும் 3 மணி நேரம் தூக்கம்)
- தேவையான சூழ்நிலையில் எந்தவொரு முடிவும் எடுக்க முடியாமல் இருப்பது
- ஞாபக மறதி
காரணங்கள் என்ன?
- அதிகமாக ஆல்கஹால் அருந்துவது
- புகைப்பிடித்தல்
- துரித உணவுகள்(ஃபாஸ்ட்புட்) வாரத்திற்கு இருமுறை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்
- பாக்கெட்டில் பதப்படுத்தப்பட்ட உணவினை எடுத்துக் கொள்ளுதல்
- மின்காந்த அலைகள் (Wifi)
- அதிகமாக மொபைல் பயன்படுத்துவது
கிலிம்ப்ட்டிக் சிஸ்டம்
மூளையிலிருக்கும் கழிவுகளை ரத்த குழாய் மூலம் வெளியே கொண்டு வருவதற்கு beta amyloid protein system உதவுகின்றது.
இது நமது ஆழ்ந்த தூக்கத்திலேயே அதிகமாக வேலை செய்யும். இதனை வேலைசெய்ய வைத்தாலே நாம் மேலே தெரிந்து கொண்ட பல பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
எவ்வாறு சரி செய்யலாம்?
- நீங்கள் தூங்க செல்லும் நேரத்தினையும், எழும்பும் நேரத்தினை சரியாக கடைபிடிக்க வேண்டும்.
- தூங்குவதற்கு 1 மணிநேரம் முன்ப ரிவி, மொபைல் இவற்றினை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
- தக்காளி, மஞ்சள், பச்சை காய்கறிகள், ஆரஞ்சு, சர்க்கரைவள்ளி கிழங்கு இவற்றினை நன்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
- உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும்
தவிர்க்க வேண்டியது
- வெள்ளை சர்க்கரையை தவிர்க்கவும்
- பாக்கெட் உணவுகளை தவிர்க்கவும்
- தூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பு காபி அருந்துதல் கூடாது.
- இரவு தூங்கும் முன்பு ஜீரண கோளாறை ஏற்படுத்தும் அசைவ உணவுகளை தவிர்க்கவும்
- தூங்கும் முன்பு மது அருந்துவதை தவிர்க்கவும்