பிளாஸ்டிக் பாட்டில் வைத்து ராக்கெட் செய்த சிறுவர்கள் - வைரல் காணொளி
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர், தனது மாணவர்களுக்கு, பிளாஸ்டிக் பாட்டில்களால் ஆன இரண்டு நிலைகளைக் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வானத்தில் பறக்கவிட்டு பிரமிக்க வைத்துள்ளார்.
வைரல் காணொளி
சீனாவின், ஜியாங்சியில் உள்ள இந்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் குழு, சாதாரண பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு இந்த ராக்கெட்டை வடிவமைத்து, தண்ணீரைப் பயன்படுத்தி ஏவி உள்ளனர்.

இந்த முயற்சி, வகுப்பறையில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டு அறிவியல் கல்வியை எவ்வளவு ஆக்கப்பூர்வமாக அணுக முடியும் என்பதை உலகுக்குக் காட்டியுள்ளனர்.
இந்த ராக்கெட்டின் அனைத்துக் கட்டுமானப் பகுதிகளுக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களையே மாணவர்கள் பயன்படுத்தினர். ராக்கெட் மேலே எழும்புவதற்கான உந்துவிசையை உருவாக்க தண்ணீரை பயன்படுத்தி உள்ளனர்.
ஒவ்வொரு பாட்டிலும் ராக்கெட்டின் ஒரு முக்கியப் பகுதியாக மாற்றப்பட்டது. இந்த செயல்முறை கடினமான அறிவியல் கோட்பாடுகளை அன்றாடப் பொருட்களைக் கொண்டு விளக்கும் படியாக இருந்தது.
A teacher and his students in Jiangxi, China, built a two stage rocket using plastic bottles powered by water pressure. 🚀 pic.twitter.com/ENfFgkTMFS
— Moments that Matter (@_fluxfeeds) December 26, 2025
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |