நீச்சல் குளத்தில் உயிருக்கு போராடிய தாய்! ஓடிவந்து காப்பாற்றிய 10 வயது சிறுவன்
அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த தாய் உயிருக்கு போராடிய நிலையில், 10 வயது மகன் காப்பாற்றியுள்ள காட்சி வெளியாகியுள்ளது.
நீச்சள் குளத்தில் தாய்
அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் உள்ள வீடு ஒன்றில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் பெண் ஒருவர் குளித்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில், நீரில் தத்தளித்துக் கொண்டுள்ளார்.
தாயார் குளித்து கொண்டிருந்த சமயத்தில், நீரை வேகமாக அடிக்கும் சத்தம் கேட்டதால், உடனடியாக கீழே நின்ற 10 வயது மகன், ஒரு நொடி கூட தாமதிக்காமல் மறுகணமே படியேறி தாயை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்.

உடனடியாக நீரில் குதித்த சிறுவன் தனது தாயாரை பிடித்த படி படிக்கட்டு அருகே மெல்ல மெல்ல கொண்டு வந்தார். தொடர்ந்து, அங்குள்ள நாய் ஒன்றும் படிக்கட்டு வரை வந்து விட்டது.
இறுதியில், வயதான ஒரு நபர் வந்து விடவே, அவரின் உதவியுடன் தனது தாயை வெளியே கூட்டி வந்துள்ளார். தற்போது இந்த காட்சி அதிகம் வைரலாகி வரும் நிலையில், சிறிய வயதில் அந்த சிறுவன் தனது தாயை காப்பாற்ற எவ்வளவு முனைப்பு காட்டுகிறான் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.