மூதாட்டியை முட்டித் தள்ளிய காளை- உயிரை காப்பாற்றிய சிறுவன் - வைரலாகும் வீடியோ
தன் உயிரை பயணம் வைத்து மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய சிறுவனின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய சிறுவன்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
நடு இரவில் பாட்டி ஒருவர் தனியாக வந்துக்கொண்டிருக்கும்போது வழியில் நின்றுக்கொண்டிருந்த ஒரு காளை மாடு அந்த மூதாட்டியை முட்டித் தள்ளியது.
உடனே ஓடி வந்த சிறுவன் அந்த பாட்டியை காப்பாற்ற முயற்சி செய்கிறான்.
இருப்பினும், அந்த காளை மாடு மறுபடியும் அந்த மூதாட்டியை முட்டித் தள்ளுகிறது.
சிறுவன் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் அந்த காளை மாட்டை விரட்டி அடித்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அச்சிறுவனின் தைரியத்தை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
The way the young boy ran to save & protect the elderly woman ???. pic.twitter.com/2G0B8wDaOY
— Kumar Manish (@kumarmanish9) April 7, 2023