36 லட்சம் கேம் விளையாடி செலவழித்த சிறுவன் - விசாரணையில் ஆடிப்போன தாய்
ஆன்லைன் மொபைல் கேம் விளையாடுவதற்காக 11ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 36 லட்சம் ரூபாய் வரை திருடி செலவு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் ஆம்பர்பேட் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுவன் ஒருவன் தாத்தாவின் மொபைல் போனை எடுத்து கேம் ஒன்றை பதிவிறக்கம் செய்து உள்ளான்.
இதற்காக அந்த செயலியை அதன் தளத்தில் இருந்து வாங்குவதற்காக ஆரம்பத்தில் ரூ 1.500 இருந்து ரூ. 10 ஆயிரம் ரூபாய் வரை தாயாரின் வங்கி கணக்கில் இருந்து திருடியுள்ளான்.

லட்சக்கணக்கில் கேம் விளையாடிய சிறுவன்
தொடர்ந்து, அந்த சிறுவன் ரூ1. 45 லட்சம் முதல் ரூ 2 லட்சம் வரையில் இருந்து தொடர்ச்சியாக பணம் எடுத்து இருக்கிறான். இதனால் ஆன்லைன் மொபைல் விளையாட்டுக்கு அடிமையாகி வீட்டின் பணத்தை கரைத்து வந்திருக்கிறான்.
இதைப்பற்றி சிறுவனின் தயாருக்கு தெரியவில்லை. அவர் வங்கிக்கு சென்று விசாரிக்கையில் தான் அதிர்ச்சியே காத்திருந்துள்ளது. அவர் வங்கி கணக்கில் 27 லட்சம் ரூபாய் வைத்திருந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த தாய்
ஆனால், அந்த தொகை அவருக்கு தெரியாமலேயே எடுக்கப்பட்டு இருந்துள்ளது. அதன் படி ரூ.9 லட்சம் ரூபாய் வரை அவரது கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
பின்னர், சைபர் பிரிவு போலீசாரிடம் அந்த பெண் புகார் அளிக்கையில், விசாரணையில் கேம் அடிமையான அவரது மகன் ரூ. 36 லட்சம் எடுத்து செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
அந்த பெண்ணின் கணவர் காவல் துறையில் பணிபுரிந்து உயிரிழந்தவர். அதற்காக கிடைத்த இழப்பீட்டு தொகையை இரண்டு வங்கிகளிலும் பிரித்து போட்டு வைத்திருக்கிறார்.
ஆனால், மகன் இரண்டு வங்கிகளிலும் திருடி செலவு செய்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.