எந்திரன் சிட்டி போல புத்தகத்தை மணப்பாடம் செய்யும் சிறுவன்: வைரலாகும் வீடியோ!
எந்திரன் திரைப்படத்தில் ஒரு நொடி பொழுதில் புத்தகங்களை சிட்டி ரஜினிகாந்த் அவர்கள் படித்தது போல, பக்கங்களை வேகமாக திருப்பி பார்த்து மனப்பாடம் செய்து விடுவார்.
அதே போல ஒரு குட்டி சிறுவன் புத்தகத்தில் இருக்கும் பாடங்களை அள்ளி அள்ளி தன் தலையில் ஊற்றி கொள்வது போல பள்ளிக்கூடத்தில் அமர்ந்து குழந்தை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ
பள்ளிக்கூடத்தில் மனப்பாடம் செய்வது எல்லாம் பலருக்கு பெரிய சவாலான விடயம் தான். இதனால் பலர் பல நேரங்களில் பாடசாலையில் இதற்காக டீச்சரிடம் அடி எல்லாம் வாங்கியிருப்போம்.
எம்மில் சிலருக்கு சுட்டுபோட்டாலும் பாடங்களை மனப்பாடம் செய்வது மனதில் நிற்காது. எப்படியாவது பாடங்களை மனப்பாடம் செய்து பரீட்சையில் பாஸாகிவிட வேண்டும் என குட்டிக்கரணம் அடித்தாலும், பரீட்சை எழுத ஆரம்பித்ததும் அனைத்தும் மறந்துவிடும்.
இந்தப் பிரச்சினையை நாம் எல்லோரும் அனுபவித்திருப்போம். ஆனால் எந்திரன் படம் பார்த்த பிறகு மனப்பாடம் செய்வது இவ்வளவு இலகுவானதா என பலரும் எந்திரன் ரஜினிப்போல முயற்சித்துப் பார்த்து ஏமாந்து போயிருப்போம்.
அதேபோல ஒரு சிறுவன் முயற்சித்த விடயம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பள்ளியில் ஒரு சிறுவன் புத்தகத்தை திருப்பி பார்த்து விட்டு அந்த பக்கத்தை தொட்டு தகவல்களை தலையில் ஏற்றிக் கொள்வதுபோல் செய்கை செய்கிறான்.
மறுபடியும் அடுத்த பக்கத்தை பார்த்து விட்டு அதையே செய்கிறான். இந்த வீடியோவை பார்க்கும் பலரும், சிறுவனின் செய்கை பார்த்து வயிறு குலுங்கி சிரிக்கிறார்கள்.
The fastest way to acquire knowledge ?? pic.twitter.com/K04ZDPDPvS
— Alvin Foo (@alvinfoo) April 12, 2022
இந்த வீடியோ டுவிட்டரில் மட்டும் ஏறத்தாழ 8 லட்சம் பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளது.