வயதுக்கு மீறிய நடனம்.. நடுரோட்டில் வெளுத்து வாங்கிய சிறுவர்கள்- அண்ணாந்து பார்த்த நெட்டிசன்கள்!
திருமண விழாவின் போது இரண்டு சிறுவர்கள் அவர்களின் வயதிற்கு மீறிய நடனமாடிய காட்சி இணையவாசிகளை வியக்க வைத்துள்ளது.
பொதுவாக பல சமயங்களில் சிறு குழந்தைகளும் திருமண விழாக்களில் நடனமாடி விருந்தினர்களை அசத்துவார்கள்.
திருமணம் என்றால் அதில் ஆட்டம் பாட்டம் கண்டிப்பாக இருக்கும்.
இவ்வாறு ஆடும் பொழுது சிலர் அதனை வீடியோவாக பதிவு செய்து “திருமண அலப்பறைகள்” என சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுவார்கள்.
திருமணத்தில் சிறுவர்கள் கொடுத்த அலப்பறை
அந்த வகையில், இரண்டு சிறுவர்கள் திருமண விழாவில் நடனம் ஆடுகிறார்கள்.
அவர்களின் நடன ஸ்டெப்கள் பார்ப்பதற்கு வயதிற்கு மீறியது போல் தெரிகின்றது.
தற்போது இருக்கும் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களில் வரும் வீடியோக்களை பார்த்து வயதிற்கு மீறிய வேலைகளை பார்த்து வருகின்றார்கள்.
குறித்த சிறுவர்களின் நடனத்தை பார்த்தால் யாராக இருந்தாலும் புன்னகைப்பார்கள்.