நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தைகள்: பெற்ற தகப்பன் செய்த இரக்கமற்ற கொடூரம்
ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளை கொலை செய்ய முயன்ற தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் பிரசாத் என்ற நபர் தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மனைவியோடு வசித்து வந்தார்.
பல வருடங்களாக ஆண் குழந்தைக்காக காத்திருந்த அவர் தொடர்ந்தும் இரண்டும் பெண் குழந்தைகளாக பிறந்ததால் வேதனையடைந்தார்.
இதன் காரணமாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டதோடு, மனைவியிடம் விவாகரத்திற்கும் கேட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி உள்ள தாத்தா பாட்டி வீட்டில் மகள்கள் பிரணவி(2) மற்றும் ஸ்ரீ (5) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்த போது, இரவு நேரத்தில் கோபத்துடன் நுழைந்த பிரசாந்த் இரண்டு குழந்தைகளையும் சுவற்றில் இடித்து அடித்துள்ளார்.
இந்த தாக்குதலில் அவரது இரண்டு வயது குழந்தை இறந்து போனது. மற்றொரு குழந்தை உயிருக்கு போராடி வரும் நிலையில் பொலிசார் கொடூர தந்தையை கைது செய்துள்ளனர்.