மலம் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுவது ஏன்?
சிறுநீர், மலம் இரண்டுமே நார்மலாக இல்லாத பட்சத்தில் என்ன காரணங்கள் என்பதை பார்க்க வேண்டியது அவசியம்.
ஏனெனில் உடலின் கழிவுகள் வெளியேற வேண்டும், உடலிலேயே தேங்கியிருக்கும் போது பல தொந்தரவுகளை சந்திக்க நேரிடும்.
இந்த பதிவில் மலம் கழிக்கும் போது ஏற்படு்ம் எரிச்சல் பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் பார்க்கலாம்.
ஒவ்வொரு நபரும் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது மலம் கழிக்கும் போது எரிச்சலை சந்திக்க நேரிடும்.
இது சாதாரணமானது அல்ல, சிலருக்கு தீவிர உடல்நலப்பிரச்சனையினால் கூட ஏற்படலாம், குடலின் உட்பகுதியில் அல்லது மலப்புழையில் தொற்றுகள், காயங்கள் மற்றும் ரத்தக்கசிவுகள் இருந்தால் எரிச்சல் இருக்கலாம்.
இது நீடிக்கும் பட்சத்தில் மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம்.
காரமான உணவுகள் உட்கொள்ளும் போதும், மலப்புழையில் பிளவுகள் இருந்தாலும், ஹெர்பீஸ் தொற்றுகளாலும், மலம் கழிக்கும் போது எரிச்சல் இருக்கலாம்.
இதுதவிர மோசமான சுகாதாரம், அவ்விடத்தில் தொடர்ச்சியான அரிப்பு, எரிச்சல் இருந்தாலும் வலியுடன் கூடியதாக இருக்கும்.
அவ்விடத்தில் சதை வளர்ச்சி, நரம்புகள் வீங்கி இருந்தாலும் இன்னும் தீவிரமான பைல்ஸ் பிரச்சனை இருந்தாலும் எரிச்சல் இருக்கலாம்.
என்ன செய்யலாம்?
ஆசன வாய் பகுதியில் ஆலிவ் எண்ணெயை தடவினால் வீக்கம் குறையும், கற்றாழை ஜெல்லையும் தடவிக் கொள்ளலாம்.
சீரகத்தை பேஸ்ட் போன்று அரைத்து விட்டு ஆசன வாய் பகுதியில் தடவினாலும் வலி குறையும்.
எலுமிச்சை சாற்றில் இஞ்சி மற்றும் தேன் கலந்து குடித்து வருவது நன்மையை தரும்.
ஒரு கிளாஸ் மோரில் கால்பங்கு ஓம பொடியை கலந்து மதிய உணவுக்கு பின்னர் குடித்து வந்தாலும் நிவாரணம் உறுதி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |