மனைவியின் ஆசையை நிறைவேற்ற சுழலும் வீட்டை உருவாக்கிய கணவர்! இந்த வயதிலும் இப்படி ஒரு காதலா?
தனது அன்பு மனைவியின் ஆசையை நிறைவேற்ற சுழலும் வீட்டை உருவாக்கிய கணவரின் செய்லை பரரும் பாராட்டி வருகின்றனர்.
குசிக் என்பவர் போஸ்னிய (bosnia) என்ற ஊரில் வாழ்ந்து வந்தார். பல வருடங்களுக்கு முன்பு, குசிக், லஜூபீக்காவை திருமணம் செய்து கொண்டார்.
போஸ்னியா(bosnia) மொழியில் அவரது மனைவியின் பெயர் “அன்பிக்கு உரியவர்” என்பதாகும். இந்த தம்பதிக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.

குசிக் தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஒரு வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவரது மனைவி தங்களது படுக்கை அறை சூரியன் திசை நோக்கி இருக்க வேண்டும் என விரும்பினார்.
இதனால் குசிக் தற்போது தனது மனைவி லஜூபீக்காவின் ஆசையை நிறைவேற்ற எண்ணி, பச்சை முகப்பில் சிவப்பு உலோக கூரையுடன் ஒரு சுழலும் வீட்டை உருவாக்கியுள்ளார்.
இது இந்தியாவில் உள்ள தாஜ்மஹாலுக்கு இணையான நினைவுச் சின்னம் இல்லை. ஆனால் வடக்கு போஸ்னியாவில் ஒரு சிறிய நகரத்தில் உள்ள ஒரு குடும்பத்தின் சொந்த வீடு.
கணவன் மனைவியின் மேல் கொண்ட அன்பினால் கட்டப்பட்ட நினைவு சின்னமாகும். தற்போது குசிக்கிற்கு 72 வயதாகும் நிலையில் வயது முதிர்ந்தாலும் அவரது மனைவியின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
குசிக்கின் குழந்தைகள் குடும்ப தொழிலை மேட்கொள்ள ஆரம்பித்த நிலையில் அதன் பின்னர் அவருக்கு அதிக ஓய்வு நேரம் கிடைத்தது.
அந்த நேரத்தில் அவர் தனது மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற எண்ணி இப்படி ஒரு சுழலும் வீட்டை கட்டினார். தற்போது அவரது மனைவி விரும்பும்போது எல்லாம் வீட்டின் அறைகளை மாற்றி அமைத்து கொள்ள முடியும்.
வீட்டின் இரண்டு படுக்கை அறைகளுக்கு இடையில் சுவரை கட்டி ஒரு புதிய அறையை உருவாக்கினார். அந்த அறை வீட்டின் லிவிங் அறை. அந்த அறையில் வீட்டின் அனைத்து எலக்ட்ரிடிகல் காங்நேச்டின் (electrical connection)யும் நிறுவினார் .
இந்த வேலையை செய்து முடிக்க அதிக காலம் தேவைப்பட்டது. ஆனாலும் தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றியது சந்தோசமாக இருந்தது என குசிக் கூறியுள்ளார். ஆறு வருடங்களுக்கு முன்பு, குசிக்கின் மூன்று பிள்ளைகளில் ஒருவருக்கு திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.
திருமணத்திற்கு பிறகு புதுமண தம்பதிகளை வீட்டின் மாடியில் தங்க வைத்தனர். குடும்பத்தின் மற்ற அனைவரும் வீட்டின் தரை தளத்தில் உள்ள அறையில் தங்கினர். இதனை தொடர்ந்து இந்த முறை தனது மனைவியின் மனம் மாறுவதக்கு முன்பு, தரை தளத்தில் சில சுவர்களை இடிக்க ஆரம்பித்து ஒரு சுழலும் வீட்டைக் கட்டி முடித்ததாக குசிக் தெரிவித்துள்ளார்.
மின் மோட்டர் மற்றும் பழைய ராணுவ போக்குவரத்து வாகனங்களின் சக்கரத்தைப் பயன்படுத்தி, தனது சுழலும் வீட்டை கட்டி முடித்துளார். இந்த சுழலும் வீட்டில் முன் கதவும் சுழல்கிறது. இந்த விடயம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.