இந்த திகதிகளில் பிறந்தவர்கள் வெற்றியடையாமல் ஓய மாட்டார்கள்... உங்க பிறந்த திகதி என்ன?
பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
அதுபோலவே எண்கணித ஜோதிடத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு மிகவும் உத்வேகம் அளிப்பவர்களாகவும் எத்தனை தடைகள் வந்தாலும் அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு தங்களின் இலக்கை அடையும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்கள் எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
16 ஆம் திகதி
16 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் மிகுந்த கற்பனை ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எதிர்கால வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்ற கற்பனையில் இருப்பார்கள்.
அது நிஜத்தில் நடக்கும் வரை இடைவிடாது உழைக்கும் தன்மை கொண்டவர்கள். இவர்களின் இந்த குணம் மற்றவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.
31 ஆம் திகதி
31ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் லட்சிய வாதிகளாக இருப்பார்கள். இவர்கள் எத்தனை தடைகள் வந்தாலும் தங்களின் இலக்கில் மட்டுமே முழு கவனத்தையும் வைத்திருப்பார்கள்.
அவர்கள் முன்னேறுவது மாத்திரமன்றி அவர்களை சுற்றியுள்ளவர்களையும் வெற்றியடைய வைக்கும் ஆற்றல் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.
12 ஆம் திகதி
12 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
இவர்கள் ஒரு விடயத்தை நடத்தி முடிக்க வேண்டும் என முடிவு செய்தால், அந்த காரியம் நிறைவடைந்தால் மாத்திரமே ஓய்வெடுப்பார்கள்.
8 ஆம் திகதி
8 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் விடாமுயற்ச்சிக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களை சுற்றி எத்தனை பிரச்சினை இருந்தாலும் அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாது இலக்கை நோக்கி பயணிக்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும்.
25 ஆம் திகதி
25 ஆம் திகதிகளில் பிறந்தவர்களுக்கு பிறப்பிலேயே நுண்ணறிவு மிகுந்தவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் வாழ்வில் அடைய வேண்டிய உயர்ந்த இலக்ககளை நிச்சயம் கொண்டிருப்பார்கள்.
இலக்கை அடையும் வரை முயற்சியை நிறுத்தவே மாட்டார்கள். இத்தகைய வலிமையான மனம் இவர்களுக்கு இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |