ஸ்ரீதேவி மரணம் குறித்து 5 வருடங்கள் கழித்து மனம் திறந்த கணவர் போனி கபூர்: நடந்தது என்ன?
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்து பேசியிருக்கிறார் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர்.
நடிகை ஸ்ரீதேவி
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழில் ரஜினி, கமல் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலத்தின் உச்சத்தின் இருந்தவர்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி திரைப்பட பக்கமும் மிகவும் பிரபலமானாவர். நடிகை ஸ்ரீதேவி பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்.
ஸ்ரீதேவி பிப்ரவரி 24, 2018 அன்று துபாயில் உள்ள ஜுமேரா எமிரேட்ஸ் டவரில் வைத்து மரணமடைந்திருந்தார். முன்னதாக அவரது மரணம் மாரடைப்பு வழக்கு என்று அழைக்கப்பட்டாலும், மரணத்திற்கான காரணம் என்னவென்று தெரியாமல் மர்மமாகவே இருக்கிறது.
ஸ்ரீதேவியின் மரணம்
ஸ்ரீதேவியின் மரணம் குறித்து இத்தனைக் காலம் மௌனம் காத்து வந்த போனி கபூர் அண்மையில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில் அவர் தெரிவித்ததாவது,
அனைவரும் என் மனைவியை நான்தான் கொன்று விட்டேன் என்று சொல்கிறார்கள். ஆனால் இது இயற்கையான மரணம் அல்ல, தற்செயலான மரணம். என் மனைவி இறந்தப்பின் என்னிடம் கிட்டத்தட்ட 48 மணிநேரம் வரைக்கும் விசாரணை நடத்தி மரணத்தை பற்றியே அதிகம் பேசினார்கள் அதனால் தான் இவ்வளவு நாள் அதைப் பற்றி பேசாமல் இருந்தேன்.
மேலும், ஸ்ரீதேவி அடிக்கடி சாப்பிடாமல் பட்டினியாக இருப்பார் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் அதனால் தான் அவள் இன்னும் திரையில் அழகாக இருக்கிறாள்.
ஸ்ரீதேவிக்கு இதற்கு முன்னரும் ஒரு முறை குளியலறையில் மயங்கி விழுந்திருக்கிறார் இந்த தகவலை ஸ்ரீதேவி இறந்த பிறகு நாகர்ஜுனா ஆறுதல் சொல்ல வந்த போது தான் அவருடன் நடித்த திரைப்படத்தின் போது டயட்டில் இருந்து குளியலறையில் விழுந்து மயங்கி விழுந்து பல் உடைந்ததாகவும் சொல்லியிருந்தார்.
அதுமட்டுமல்ல நான் திருமணம் செய்துக் கொண்ட பிறகு ஸ்ரீதேவி கடுமையான உணவுமுறைகளை பின்பற்றி வந்ததாகவும் இரவு சாப்பிடும் போது கூட உப்பு சேர்க்காத உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவார் ஆனால் இவையெல்லாம் அவள் மரண சம்பவத்திற்கு காரணமாகும் என எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |